ஏழைகளிடம் கொள்ளையடித்தால் மோடி நடவடிக்கை எடுப்பான் - பிரசாரத்தில் அசத்திய மோடி.! - Seithipunal
Seithipunal


குஜராத் மாநிலத்தில் சட்டசபை தேர்தலுக்கான முதல் கட்ட  வாக்குப்பதிவு முடிவடைந்த நிலையில், இரண்டாம் கட்ட வாக்குபதிவிற்கான பிரச்சாரம் ஆரம்பித்து நடைபெற்று வருகிறது. 

இந்நிலையில், பனஸ்கந்தா மாவட்டம் கங்ரேஜ் கிராமத்துக்கு தேர்தல் பிரசார பொதுக்கூட்டத்தில் கலந்துகொள்வதற்காக சென்ற பிரதமர் மோடி, அங்குள்ள அகர்நாத் கோவிலில் தரிசனம் செய்த பின், பொதுக்கூட்டத்தில் பேசினார். அப்போது அவர் தெரிவித்ததாவது: 

"காங்கிரஸ் கட்சிக்கு ஒரு செயலை தடுப்பது, தாமதப்படுத்துவது, திசைதிருப்புவது போன்றவற்றில் தான் அதிக நம்பிக்கை. இதற்கு முன்பு நர்மதை ஆற்று நீரை இந்த வறண்ட பகுதிக்கு கொண்டு வருவதாக காங்கிரஸ் கட்சி வாக்குறுதி அளித்துள்ளது. 

அது இங்குள்ள வயதானவர்களுக்கு தெரியும். ஆனால் இதுவரைக்கும் எதுவுமே செய்யவில்லை. அதுமட்டுமல்லாமல், சர்தார் சரோவர் அணை கட்டுவதை காங்கிரஸ் கட்சி தடுக்க முயன்றது. 

அதற்கு எதிராக நீதிமன்றத்தில் மனு மேல் மனு போட்டு தாமதப்படுத்தியவர்களை ஆதரித்தது. இந்த பாவத்தை செய்த காங்கிரசுக்கு மன்னிப்பு என்ற ஒன்றே  கிடையாது. அவர்களை நீங்கள் மன்னிக்க மாட்டீர்கள் என்று நம்புகிறேன். 

பொதுவாக காங்கிரஸ் கட்சி பணம் சம்பாதிக்க வாய்ப்புள்ள திட்டங்களில் மட்டுமே அக்கறை செலுத்தும். பணம் சம்பாதிக்க முடியாத திட்டங்களை தோஇரும்பிக் கூட பார்க்காது. இந்த வறண்ட பகுதிக்கு பா.ஜக. தான் நர்மதை நீரை கொண்டு வந்தது. அதேபோல், விடுபட்ட பகுதிகளுக்கும் தண்ணீரை கொண்டு செல்வோம். 

இதேபோன்று, ஏழை மக்களிடம் இருந்து கொள்ளையடித்தவர்கள் மற்றும் ஊழல் செய்தவர்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் என்னை திட்டுகிறார்கள். ஏழைகளுக்கு செல்ல வேண்டிய உணவு தானியங்கள் வேறு எங்கேயோ கொண்டு செல்லபட்டது. அதற்காக, நான்கு லட்சம் போலி ரேஷன் கார்டுகளை ஒழித்தோம். 

நாட்டிலுள்ள ஏழைகளிடம் இருந்து கொள்ளையடித்தால், மோடி நடவடிக்கை எடுப்பான். அப்படிப்பட்டவர்கள் பிடிபடும்போது என்னை திட்டுகிறார்கள். மேலும், குஜராத் மாநிலத்தில் நடைபெற்ற முதல் கட்ட தேர்தளுக்கு வாக்களிப்பதற்கு மக்கள் திரண்டு வந்ததைப் பார்க்கும்போது பா.ஜ.க. அமோக வெற்றி பெறும் என்ற நம்பிக்கை உள்ளது" என்று மோடி தெரிவிதார்.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

prime minister modi speach for election campaign in gujarat


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->