பெண்களின் வாழ்க்கையை காப்பாற்றியுள்ளது எங்கள் அரசாங்கம் - பிரதமர் மோடி.! - Seithipunal
Seithipunal


மத்திய அரசு பணிகளுக்கு புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட 71 ஆயிரத்துக்கும் மேற்பட்ட இளைஞர்களுக்கு பிரதமர் மோடி காணொலி காட்சி மூலம் இன்று பணி நியமன உத்தரவு கடிதங்களை வழங்கினார். அதன் பின்னர் பிரதமர் மோடி அவர்களிடம் உரையாற்றினார். அப்போது அவர் தெரிவித்ததாவது:-

"இந்திய நாட்டை முன்னோக்கி கொண்டு செல்வதற்கு இளைஞர்களின் திறமைகளை வளர்ப்பது மிகவும் அவசியம். இந்த பொறுப்பு நாட்டின் கல்வி முறைக்கு உள்ளது என்பதனால்தான் பல தசாப்தங்களாக நவீனத்தின் அவசியத்தை நாடு உணர்ந்துள்ளது. 

தாய் மொழியில் கற்பித்தல் மற்றும் தேர்வுகளை நடத்தும் கொள்கையை நாங்கள் அறிமுகப்படுத்தியுள்ளோம். இன்று எங்கள் அரசாங்கம் இளைஞர்களுக்கு வெவ்வேறு மொழிகளில் ஆட்சேர்ப்பு தேர்வை எழுதும் வாய்ப்பை வழங்கியுள்ளது. அதிலும் விவசாயத்துறையில் ஏராளமான இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு கிடைத்துள்ளது.

ஆயிரக்கணக்கான பெண்களுக்கு நியமனக் கடிதங்கள் இன்று வழங்கப்பட்டுள்ளது. இந்த செயல் மற்ற பெண்களுக்கும் ஊக்கமளிக்கும். பெண்களை எல்லா துறைகளிலும் தன்னிறைவு பெற செய்வதே எங்கள் முயற்சி. 26 வார மகப்பேறு விடுப்பு வழங்கும் முடிவு கோடிக்கணக்கான பெண்களின் வாழ்க்கையை காப்பாற்றியுள்ளது. எங்கள் அரசாங்கம் 30 கோடி பெண்களுக்கு ஜன்தன் கணக்குகளை திறந்துள்ளது. இது அவர்கள் அரசாங்கத் திட்டங்களிலிருந்து நேரடியாக பயனடைவதை உறுதி செய்துள்ளது" என்றுத் தெரிவித்தார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

prime minister modi speech in job appointment order function


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->