அசாமின் முதல் வந்தே பாரத் ரயில்... இன்று தொடங்கி வைக்கிறார் பிரதமர் மோடி..! - Seithipunal
Seithipunal


அசாமின் முதல் வந்தே பாரத் ரயிலை இன்று பிரதமர் மோடி காணொலி மூலம் கொடியசைத்து தொடங்கி வைக்கிறார். இந்த ரயில் அசாம் மாநிலத்தின் கவுகாத்தி நகரையும், மேற்கு வங்காளத்தின் நியூ ஜல்பைகுரி நகரையும் இணைக்கும். மேலும் இந்த ரயில் அசாமின் கம்ரூப் பெருநகரம், கம்ரூப் ரூரல், நல்பாரி, பார்பெட்டா, சிராங், கோக்ரஜார் மாவட்டங்கள் மற்றும் வடக்கு வங்காளத்தின் அலிபுர்துவார், நியூ கூச்பெஹார் மற்றும் ஜல்பைகுரி மாவட்டம் வழியாக செல்லும்.

உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட இந்த ரயில் வாரத்தில் 6 நாட்கள் இயக்கப்படும். மேலும் 411 கிலோமீட்டர் தூரத்தை ஐந்தரை மணி நேரங்களில் கடக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் அதிநவீன வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் இப்பகுதி மக்களுக்கு வேகத்துடனும் வசதியுடனும் பயணிக்க வழிவகை செய்யும் என்றும், இது இப்பகுதியில் சுற்றுலாவையும் மேம்படுத்தும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையடுத்து புதிய மின்மயமாக்கப்பட்ட பகுதியின் 182 கிமீ பாதையை பிரதமர் மோடி அர்ப்பணிக்கிறார். இது அதிக வேகத்தில் இயங்கும் ரயில்கள் மற்றும் ரயில்களின் இயக்க நேரத்தைக் குறைப்பதன் மூலம் மாசு இல்லாத போக்குவரத்தை வழங்க உதவும்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Prime Minister Modi will inaugurate Assam first Vande Bharat train today


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->