வேகமாக வளரும் இந்தியா! வளர்ச்சி அடைந்த பாரதமே இலக்கு - பிரதமர் மோடி! - Seithipunal
Seithipunal


எதிர்ப்பு அரசியலை கைவிட்டு ஒன்றுபட்டு செயல்பட வாருங்கள் என பிரதமர் நரேந்திர மோடி எதிர்கட்சிக்கு அழைப்பு விடுத்துள்ளார்.

இன்று பாராளுமன்றத்தில் மழை கால கூட்டத் தொடர் தொடங்கியது இதனை விட்டு பிரதமர் நரேந்திர மோடி பாராளுமன்ற வளாகத்தில் செய்தியர்களை சந்தித்தார். அப்போது பிரதமர் நரேந்திர மோடி பேசியதாவது, மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த பாராளுமன்ற கூட்டத்தொடர் இன்று தொடங்குகிறது.

ஒட்டு மொத்த நாடும் பட்ஜெட் கூட்டல் தொடரை எதிர்பார்த்து வருகிறது. கூட்டத்தொடர் சமூகமாக நடைபெற எதிர்க்கட்சிகள் ஒத்துழைக்க வேண்டும். வளர்ச்சி அடைந்த பாரதம் 2047 இலக்கை அடையும் வகையில் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட உள்ளது.

அனைத்து தேவைகளையும் கருத்தில் கொண்டு பட்ஜெட் தயாரிக்கப்பட்டுள்ளது. நாட்டு மக்களுக்கு அளித்த அனைத்து வாக்குறுதிகளிலும் நிறைவேற்றப்படும் வளர்ச்சிக்கான பாதையில் நாடு மிக வேகமாக முன்னேறிக் கொண்டிருக்கிறது. எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு அரசியலை கைவிட்டு விட்டு நாட்டின் வளர்ச்சிக்காக பணியாற்ற முன்வர வேண்டும்.

நாளை தாக்கல் செய்யப்பட உள்ள பட்ஜெட் அடுத்த 5 ஆண்டுகளுக்கு இந்தியாவை வழிநடத்தும். உலக நாடுகளை ஒப்பிடும்பொது இந்தியா அதிவேகமாக வளர்ந்து வருகிறது. வளர்ச்சி அடைந்த பாரதத்தை உருவாக்குவதே எங்கள் கனவு என பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Prime Minister Narendra Modi said to leave opposition politics and work together


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->