வெள்ள நிவாரணம் குறித்து ஆலோசனையில் இறங்கிய பிரதமர் அலுவலகம்.!! - Seithipunal
Seithipunal


மிக்ஜாம் புயல் காரணமாக சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களில் வெள்ளம் சூழ்ந்து ஏற்பட்ட பேரிடர் பாதிப்பு மற்றும் கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி, தென்காசி ஆகிய தென் மாவட்டங்களில் பல இடங்களில் அண்மையில் கனமழை மழையால் ஏற்பட்ட பாதிப்பால் மக்களின் இயல்பு வழக்கை முடங்கியது. பல்வேறு இடங்களில் போக்குவரத்து துண்ணடிக்கப்பட்டதால் மீட்பு பணியில் தொய்வு ஏற்பட்டது. இதற்கிடையே மழையால் உயிரிழந்தவர்களுக்கு நிவாரணம் ரூ. 4 லட்சத்திலிருந்து ரூ. 5 லட்சமாக உயர்த்தப்படுகிறது.

 

இந்நிலையில் தமிழகத்தில் வெள்ள பாதிப்பு  நிவாரணப் பணிகள் தொடர்பாக டெல்லியில் உள்ள பிரதமர் அலுவலகத்தில் உயர் மட்ட கூட்டம் நடைபெற்றது. இந்த உயர் மட்ட கூட்டத்தில் தமிழகத்தின் வெள்ளம் மற்றும் நிவாரண நிலை குறித்து விவாதிக்கப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. குறிப்பாக வெள்ளத்திற்கு பிந்தைய நிலவரம், தமிழகத்திற்கு வழங்கப்பட வேண்டிய நிதியுதவி, பொருலள் உதவிகள் குறித்து ஆலோசிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Prime Minister's Office has consulted on tamilnadu flood relief


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->