ஜம்மு காஷ்மீர்: மர்ம முறையில் கொலை செய்யப்பட்ட சிறைத்துறை டிஜிபி.! போலீசார் தீவிர விசாரணை.! - Seithipunal
Seithipunal


ஜம்மு காஷ்மீரில் மர்ம முறையில் சிறைத்துறை டிஜிபி கொலை செய்யப்பட்ட சம்பவம் குறித்து போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

ஜம்மு காஷ்மீர் மாநிலம் உதய்வாலா என்ற பகுதியில் வசித்து வந்தவர் ஹேமந்த் குமார் லோஹியா (57). சிறைத்துறை டி.ஜி.பி. லோஹியா, 1992ம் ஆண்டு ஐ.பி.எஸ். கேடர் ஆவார். இவர் கடந்த ஆகஸ்ட் மாதம் சிறைத்துறை டி.ஜி.பி.யாக பதவி உயர்வு பெற்று பொறுப்பேற்றார்.

இந்நிலையில், லோஹியா நேற்று வீட்டில் மர்மமான முறையில் கொலை செய்யப்பட்டு சடலமாக கிடந்துள்ளார். இதையடுத்து இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்து வந்த உள்ளூர் போலீசார், இதுகுறித்து விசாரணை மேற்கொண்டனர்.

இதில் குடும்ப பிரச்னை காரணமாகவோ அல்லது முன்விரோதம் காரணமாகவோ இந்த கொலை நடந்திருக்கலாம் என்று போலீசார் கூறுகின்றனர்.

இதையடுத்து போலீசார், லோஹியாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது குறித்து வழக்கு பதிவு செய்து போலீசார், தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Prison Department DGP who was murdered mysteriously in Jammu Kashmir


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->