நடிகை குஷ்பு உள்ளியூட்ட பாஜகவினர் கைது!
madurai bjp protest
சென்னை அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமைக்கு எதிராக அனைத்து எதிர்க்கட்சிகளும் போராட்டங்களை நடத்தி வருகின்றன.
குறிப்பாக திமுக நிர்வாகி என்று சொல்லப்படும் குற்றவாளியின் பின்னணி மற்றும் அவருடன் தொடர்பில் இருபபவர்களை வெளிக்கொண்டு வர அரசை அழுத்தம் கொடுக்கும் விதமாக இந்த போராட்டங்கள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.
இந்த நிலையில், பா.ஜ.க. மாநில தலைவர் அண்ணாமலை, மாணவிக்கு நீதிக்கான யாத்திரை பேரணி இன்று நடைபெறும் என்று அறிவித்தார். இந்த பேரணிக்காக மதுரை மாநகர காவல்துறையில் அனுமதி கோரப்பட்டதுடன், மறுப்பை மீறி பேரணி நடைபெற்றது.
மதுரையில் தொடங்கிய பேரணிக்கு மாநில மகளிரணி தலைவர் உமாரதி தலைமை தாங்கினார். பா.ஜ.க. தேசிய செயற்குழு உறுப்பினர் குஷ்பு பேரணியை தொடங்கி வைத்தார்.
ஆயிரக்கணக்கான மகளிரணி நிர்வாகிகள் கலந்துகொண்ட இந்த பேரணியில், பங்கேற்றவர்கள் அனைவரும் காவல்துறையால் கைது செய்யப்பட்டு உள்ளனர்.