5 மற்றும் 8வகுப்பு மாணவர்கள் மீது பொதுத்தேர்வை திணிப்பதா? vck போராட்டம் அறிவிப்பு!
Is it to impose public exams on students of classes 5 and 8? VCK Protest Announcement
ஐந்து மற்றும் எட்டாம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு நடத்தும் ஒன்றிய பாஜக அரசின் முடிவை புதுச்சேரியில் அமல்படுத்தக் கூடாது என்று விசிக முதன்மைச் செயலாளர் தேவ. பொழிலன் வலியுறுத்தியுள்ளார் .
இதுகுறித்து புதுச்சேரி விசிக முதன்மைச் செயலாளர் தேவ. பொழிலன் தெரிவிக்கையில்: ஐந்து மற்றும் எட்டாம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு நடத்துவது என்று ஒன்றிய பாஜக அரசு முடிவெடுத்துள்ளது.தேசிய கல்விக் கொள்கை (NEP) மாணவர்களின் கல்வி பரவலுக்கு வழி வகுக்காமல் மாறாக மாணவர்களின் மீது உளவியல் தாக்குதலை நடத்தி இடைநிற்றலை அதிகப்படுத்தும் ஆபத்தைக் கொண்டுள்ளது என்று பல்வேறு மாணவர் அமைப்பினர் மற்றும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி உள்ளிட்ட ஜனநாயக சக்திகள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர்.
இந்த நிலையில் ஒன்றிய அரசின் கீழ் இயங்கும் பள்ளிக்கல்வி நிறுவனங்களான கேந்திர வித்யாலயா மற்றும் நவோதயா வித்யாலயா ஆகிய பள்ளிகளில் இப்பொது தேர்வு நடைமுறைப்படுத்தப்படும் என்று ஒன்றிய அரசு அறிவித்துள்ளது. இருப்பினும் இத்தகைய கல்வி நிறுவனங்களிலும் அனைவருக்கும் கல்வி சட்டம் 2009 கீழ் 25 சதவீத மாணவர்கள் தலித்துகள், பிற்படுத்தப்பட்டோர்,மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் வறுமை கோட்டிற்கு கீழ் வாழும் குடும்பத்தினரின் பிள்ளைகள் படித்து வருகின்றனர். எனவே ஒன்றிய அரசு கல்வி நிறுவனங்களிலும் இந்த பொதுத்தேர்வு முறையை அமல்படுத்த கூடாது என்று கல்வியாளர்கள் மற்றும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தேசிய தலைவர் தொல்.திருமாவளவன் ஆகியோர் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர்.
இந்த நிலையில் ஒன்றிய பாஜக அரசின் இந்த முடிவை புதுச்சேரி அரசு அப்படியே ஏற்றுக் கொள்வது புதுச்சேரி மாநில மாணவர்களின் எதிர்காலத்தை பாழாக்கும். ஒன்றிய அரசின் மக்கள் விரோத முடிவுக்கு தலையாட்டும் வகையில் வகையில் புதுச்சேரி மாநிலத்தில் உள்ள மாநில அரசின் பள்ளிகள் மற்றும் தனியார் பள்ளிகளிலும் ஐந்து மற்றும் எட்டாம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு நடத்தப்படும் என்று கல்வித்துறை அமைச்சர் நமச்சிவாயம் அறிவித்துள்ளது அதிர்ச்சியை அளிக்கிறது.புதுச்சேரி மாநில மாணவர்களின் எதிர்காலத்தின் மீது மண்ணை அள்ளி போடும் வேலையை கல்வித்துறை அமைச்சர் நமச்சிவாயமும் ,புதுச்சேரி அரசும் செய்து வருவது வேதனை அளிக்கிறது. புதுச்சேரி அரசின் பள்ளிகளில் CBSE பாடத்திட்டம் திணிக்கப்பட்டுள்ள நிலையில் அதற்கு ஏற்றார் போல் ஆசிரியர்களுக்கான திறன் மேம்பாட்டு பயிற்சிகள் கூட முறையாக வழங்கப்படாத நிலையில் அவசரகதியில் ஐந்து மற்றும் எட்டாம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வை நடத்துவது சமூகத்தில் ஆபத்தான விளைவுகளை ஏற்படுத்தும்.எனவே மாணவர்கள் மற்றும் பெற்றோர்களை அச்சத்தில் தள்ளியுள்ள ஒன்றிய பாஜக அரசின் இந்த முடிவை புதுச்சேரி அரசு நடைமுறைப்படுத்தக் கூடாது என விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சார்பில் வலியுறுத்துகிறோம்.
இந்த விவகாரத்தில் என்.ஆர். காங்கிரஸ் கட்சியின் நிலைப்பாடு என்ன என்பதை முதல்வர் ரங்கசாமி அவர்கள் பொதுமக்களுக்கு தெளிவுபடுத்த வேண்டும் என விடுதலைச் சிறுத்தைகள் சார்பில் கேட்டுக்கொள்கிறோம்.அதே நேரத்தில் புதுச்சேரி மாநில சட்டப்பேரவையில் ஒன்றிய அரசின் இந்த முடிவு எதிர்த்து தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என்றும், புதுச்சேரி மாநிலத்திற்கு இப்பொது தேர்வில் இருந்து விளக்கு பெற ஆக்கபூர்வமான முயற்சிகளை புதுச்சேரி அரசு மேற்கொள்ள வேண்டும் என விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சார்பில் வலியுறுத்துகிறோம். ஐந்து மற்றும் எட்டாம் வகுப்பு மாணவர்களின் மீது பொதுத் தேர்வை திணிக்கும் ஒன்றிய பாஜக அரசின் முடிவை தலையாட்டி பொம்மையாக ஏற்கும் புதுச்சேரி பாஜக அரசை கண்டித்து விரைவில் போராட்டம் நடத்தப்படும் என்று விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் எச்சரிக்கையோடு தெரிவித்துக் கொள்கிறோம் இவ்வாறு விசிக முதன்மைச் செயலாளர் தேவ. பொழிலன் வலியுறுத்தியுள்ளார் .
English Summary
Is it to impose public exams on students of classes 5 and 8? VCK Protest Announcement