பாலியல் புகார்.. மல்யுத்த வீரர்கள் போராட்டம்.. பிரியங்கா காந்தி ஆதரவு.! - Seithipunal
Seithipunal


மல்யுத்த வீரர்களின் போராட்டத்திற்கு காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி ஆதரவு தெரிவித்துள்ளார்.

இந்திய மல்யுத்த கூட்டமைப்பு தலைவர் பிரிஜ் பூஷண் சரண்சிங்குக்கு எதிராக அளித்த பாலியல் தொல்லை புகார் மீது நடவடிக்கை எடுக்காததை கண்டித்து போராட்டம் நடைபெற்று வருகிறது.

அதன்படி இந்திய மல்யுத்த கூட்டமைப்பு தலைவர் பிரிஜ் பூஷன் சரண் சிங்கிற்க்கு எதிராக அளித்த பாலியல் புகார் மீது நடவடிக்கை எடுக்காததால் மல்யுத்த வீராங்கனைகள் டெல்லியில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். தற்போது இந்த போராட்டத்திற்கு ஆதரவாக மல்யுத்த வீரர்களும் களத்தில் இறங்கியுள்ளனர்.


இந்த நிலையில் மல்யுத்த வீரர்களின் போராட்டத்திற்கு காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி ஆதரவு தெரிவித்துள்ளார். மேலும் இது குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

அந்த பதிவில் "மல்யுத்த வீரர்கள் நாடாளுமன்றம் அருகே கண்ணீர் மல்க போராட்டம் நடத்தி வருகின்றனர். அவர்களின் குரலை யாரும் கண்டு கொள்ளவில்லை. அவர்களது புகார் மீது விசாரணை நடக்கும் என்று மத்திய அரசு கூறியது ஆனால் விசாரணைக்கு நடக்கவில்லை அதனால் தண்டனை குறித்து கேள்வி எழவில்லை.

குற்றவாளியை பாதுகாக்க மத்திய அரசு விரும்புகிறதா? டெல்லி காவல்துறைக்கும் அழுத்தம் கொடுப்பது யார்? ஒரு கட்சியின் ஆணவம் விண்ணலவுக்கு உயர்வாக இருக்கும் போது இது போன்ற குரல்கள் நசுக்கப்படுகின்றன. நமது சகோதரரிகளுக்கு ஆதரவு கொடுப்போம்" என அவர் தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Priyanka Ghandhi support to wrestlers protest in Delhi


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->