சிறை தண்டனை விதித்து எனது சகோதரரை அடக்க முடியாது - ப்ரியங்கா காந்தி.! - Seithipunal
Seithipunal


பிரதமர் மோடி குறித்து அவதூறாக பேசிய வழக்கில் காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்திக்கு 2 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. இந்த சிறை தண்டனையை எதிர்த்து மேல்முறையீடு செய்ய எதுவாக ராகுல் காந்திக்கு உடனடியாக பிணை வழங்கி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கடந்த 2019 ஆம் ஆண்டு நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி குறித்து அவதூறாக பேசியதாக முன்னாள் அமைச்சரும், தற்போதைய பாஜக சட்டமன்ற உறுப்பினரான புர்னேஷ் மோடி குஜராத் மாநிலத்தில் உள்ள சூரத் மாவட்ட நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

இந்த வழக்கு விசாரணை இன்று நடைபெற்ற நிலையில் ராகுல் காந்திக்கு 2 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்துள்ளது. இதனையடுத்து ராகுல் காந்திக்கு சிறை தண்டனை விதித்ததை தொடர்ந்து நாடு முழுவதும் காங்கிரஸ் கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். 

இந்த நிலையில் ராகுல் காந்திக்கு சிறை தண்டனை விதிக்கப்பட்டதை கண்டித்து அவரது சகோதரி ப்ரியங்கா காந்தி ட்விட்டரில் பதிவிட்டுள்ளார். 

அந்த பதிவில் "ஒட்டுமொத்த அதிகாரத்தை வைத்து பாரபட்சம் இல்லாமல் தண்டனை விதித்து ராகுல் காந்தியின் குரலை நசுக்க முயல்கிறது. எனது சகோதரர் ஒருபோதும் பயந்ததில்லை, பயப்படவும் மாட்டார் உண்மையை மட்டுமே பேசி, உண்மையாகவே இருப்பார். நாட்டு மக்களுக்காக தொடர்ந்து குரல் கொடுத்துக் கொண்டே இருப்பார். உண்மையின் சக்தியும் கோடிக்கணக்கான நாட்டு மக்களின் அன்பும் அவரிடம் உள்ளது" என அவர் தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Priyanka Ghandhi tweet about Rahul Gandhi jail punishment


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->