கருணை கொலையில் இருந்து நண்பனை காப்பற்றுங்கள் - மத்திய அரசுக்கு மனு தாக்கல் செய்த பெண்.!
Protect friend from mercy killing petition to central government
கேரள மாநிலத்தை சேர்ந்த 49 வயதான பெண் ஒருவர் டெல்லி கோர்ட்டில் ஒரு மனு தாக்கல் செய்தார்.
அதில் அவர் தெரிவித்திருப்பதாவது,
"டெல்லியை சேர்ந்த என் ஆண் நண்பருக்கு அபூர்வ நோய் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இந்த நோய் பாதிப்பால் அவருக்கு நரம்பு அழற்சி ஏற்பட்டு படுத்த படுக்கையாக உள்ளார்.
அவருடைய வேலைகளை கூட அவரால் செய்ய முடியாததால் பெரிய மன அழுத்தத்துக்கு ஆளாகியுள்ளார். கடந்த 2014-ம் ஆண்டு முதல் அவர் இந்த நோயால் அவதிப்பட்டு வருவதால் தற்போது அவர் ஐரோப்பிய நாட்டுக்கு சென்று அங்கு கருணை கொலையில் ஈடுபட திட்டமிட்டு இருக்கிறார்.
இதனால் அவர் சிகிச்சைக்கு செல்வதாக கூறி விசாவுக்கு விண்ணப்பித்து இருக்கிறார். அவ்வாறு அவர் வெளிநாடு சென்றால் அவரது குடும்பத்தினர் பெரும் பாதிப்புக்கு ஆளாவார்கள்.
எனவே அவருக்கு வெளிநாடு செல்ல விசா வழங்ககூடாது" என்று மத்திய அரசுக்கு தன் நண்பருக்காகவும், அவரின் குடும்பத்துக்காகவும் உதவும் வகையில் இந்த மனுவை அளித்துள்ளார்.
English Summary
Protect friend from mercy killing petition to central government