புதுச்சேரியில் ஆ.ராசாவை கண்டித்து போராட்டம்! பேருந்து கண்ணாடிகள் உடைக்கப்பட்டன! - Seithipunal
Seithipunal


இந்து மதத்தைப் பற்றி இழிவாக பேசிய ஆ.ராசாவை கண்டித்து புதுச்சேரியில் பாஜகவினர் முழு அடைப்பு போராட்டம்!

இந்து மதத்தையும் அதன் நம்பிக்கையும் பற்றி இழிவாக பேசிய ஆ.ராசாவை கண்டித்து தமிழகம் முழுவதும் பல்வேறு பகுதிகளில் கண்டன ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்று வருகின்றன. நேற்று கோவையில் நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டத்தை தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தலைமை தாங்கி நடத்தி வைத்தார்.

இதேபோன்று இன்று புதுச்சேரியில் முழு அடைப்பு போராட்டத்திற்கு புதுச்சேரி பாஜக அழைப்பு விடுத்திருந்தது. இதற்கு ஆதரவாக கடைகள், தனியார் பள்ளிகள் மற்றும் தனியார் பேருந்துகள் உள்ளிட்டவை செயல்படவில்லை. தனியார் பேருந்துகள் ஓடாததால் மக்கள் பெரும் அவதிக்கு உள்ளாகியுள்ளனர்.  

மேலும் தமிழ்நாடு புதுச்சேரி எல்லையில் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் சோதனை சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த போராட்டத்தின் எதிரொலியாக தமிழ்நாட்டில் இருந்து புதுச்சேரிக்கு இயக்கப்படும் பேருந்துகளின் எண்ணிக்கை குறைக்கப்பட்டுள்ளது. 

அவ்வாறு இயக்கப்படும் பேருந்துகளில் கண்ணாடிகள் உடைக்கப்படுவதால் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் பேருந்துகள் இயக்கப்படுகின்றன. பெரும்பாலான கடைகள் அடைக்கப்பட்டு பேருந்துகள் ஓடாததால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Protest against A Rasa in Puducherry Bus windows were broken


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->