கேரளா மாநிலத்தில் பொதுத்தேர்வு தொடங்கும் தேதி அறிவிப்பு.! - Seithipunal
Seithipunal


இன்று கேரளா மாநிலத்தில் நடப்புக் கல்வி ஆண்டுக்கான ( 2022-23 ) பத்தாம் வகுப்பு மற்றும் பன்னிரெண்டாம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு தொடங்கும் தேதியை கல்வித்துறை அறிவித்துள்ளது.

அதன்படி பத்தாம் வகுப்பு தேர்வுகள் அடுத்த ஆண்டு மார்ச் மாதம் 9-ந்தேதி தொடங்கி மார்ச் மாதம் 29-ந்தேதி முடிவடைகிறது. 

இந்த பொதுத்தேர்வுக்கான மாதிரித் தேர்வுகள் வரும் பிப்ரவரி மாதம் 27-ந்தேதி தொடங்கி மார்ச் மாதம் 3-ந்தேதி முடிவடைகிறது.

இதையடுத்து, பத்தாம் வகுப்பு விடைத்தாள் திருத்தும் பணிகள் ஏப்ரல் மாதம் 3-ந்தேதி தொடங்கும் என்றும் இந்தத் தேர்வு முடிவுகள் மே மாதம் 10-ந்தேதி அறிவிக்கப்படும் என்றும் கேரள பொதுக்கல்வித்துறை தெரிவித்துள்ளது. 

அதேபோல், பன்னிரண்டாம் வகுப்புக்கான தேர்வுகள் அடுத்த ஆண்டு மார்ச் மாதம் 10-ந்தேதி தொடங்கி 30-ந்தேதி முடிவடைகிறது. இதற்கான மாதிரித் தேர்வுகள் பிப்ரவரி மாதம் 27-ந்தேதி தொடங்கி மார்ச் மாதம் 3-ந்தேதி முடிவடைகிறது. 

இதையடுத்து பன்னிரண்டாம் வகுப்பு செய்முறைத் தேர்வு பிப்ரவரி மாதம் 1-ந்தேதி தொடங்குகிறது. இதைத்தொடர்ந்து, தொழிற்கல்வி பிரிவு மாணவர்களுக்கு செய்முறைத் தேர்வு ஜனவரி மாதம் 25-ந்தேதி தொடங்குகிறது. 

இந்தத் தேர்வுக்கான விடைத்தாள்கள் திருத்தும் பணிகள் ஏப்ரல் மாதம் 3-ந்தேதி தொடங்கும் என்றும் இந்தத் தேர்வுக்கான முடிவுகள் மே மாதம் 25-ந்தேதிக்குள் அறிவிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

public exam dale allounce in kerala


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->