உ.பியில் பொதுத் தேர்வு வினாத்தாள் கசிந்ததால் பரபரப்பு.!
public exam question paper leak in uttar pradesh
உத்தரப் பிரதேசம் மாநிலத்தில் நேற்று முதல் பன்னிரண்டாம் வகுப்பு பொதுத் தேர்வுகள் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் தேர்வு துவங்கிய அடுத்த ஒரு மணி நேரத்தில் வாட்ஸப் குழு ஒன்றில் பொதுத் தேர்வுக்கான கணக்கு மற்றும் உயிரியல் பாட வினாத்தாள்கள் வெளியானதால் பரபரப்பு ஏற்பட்டது.
இந்த வினாத்தாள், தனியார், கல்லூரி ஒன்றின் முதல்வர் மகனால் 'பிரின்சிபல்ஸ் ஆக்ரா’ என்ற வாட்ஸ்அப் குழுவில் வெளியானது. இந்தச் சம்பவம் கல்வித்துறை வட்டாரத்தில் அதிகாரிகளை பெரும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது.
இதைத் தொடர்ந்து, ஆக்ரா மாவட்ட பள்ளி ஆய்வாளர் தினேஷ் குமார் போலீஸில் புகார் அளித்தார். அந்த புகாரின் பேரில் ஃபதேபூர் சிக்ரியில் உள்ள ரஜவுலி அதார் சிங் இன்டர் கல்லூரி முதல்வர், கல்லூரியில் கணினி ஆபரேட்டராக பணிபுரியும் அவரது மகன் உள்ளிட்ட பலர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
இந்த விவகாரம் தொடர்பாக விசாரணை நடத்த கல்வித்துறை ஒரு குழுவை அமைத்துள்ளதாக இடைநிலைக் கல்வித்துறை இணை இயக்குநரும், தேர்வுகளுக்கான பார்வையாளருமான முகேஷ் அகர்வால் தெரிவித்துள்ளார்.
English Summary
public exam question paper leak in uttar pradesh