புதுச்சேரியில் பெரும் பதற்றம்.. 100க்கும் மேற்பட்ட அதிமுகவினர் அதிரடி கைது.!! - Seithipunal
Seithipunal


புதுச்சேரியில் ஒன்பது வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டதை கண்டித்து அதிமுக சார்பில் புதுச்சேரி முழுவதும் உள்ளடைப்பு போராட்டத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டு இருந்தது.

அதன்படி இன்று காலை தொடங்கிய முழு அடைப்பு போராட்டத்திற்கு பெரும்பாலான வணிக நிறுவனங்கள், வியாபாரிகள், தனியார் பேருந்து உரிமையாளர்கள் ஆட்டோ ஓட்டுநர்கள் ஆதரவு தெரிவித்துள்ளதால் புதுச்சேரி மாநிலம் தம்பித்துள்ளது. 

மூழு அடைப்புக்கு போராட்டம் காரணமாக புதுச்சேரியில் உள்ள திரையரங்குகளில் இரண்டு காட்சிகளும் ரத்து செய்யப்பட்டுள்ளது. அதேபோன்று தனியார் பள்ளிகளுக்கும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. சிறுமியின் மரணத்திற்கு நியாயம் கேட்டு புதுச்சேரியில் அதிமுகவினர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

புதுச்சேரி அண்ணா சிலை அருகே அதிமுக மாநில செயலாளர் அன்பழகன் தன்மையில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட அதிமுகவினரை போலீசார் வலுக்கட்டாயமாக கைது செய்து அழைத்துச் சென்றனர். இதனால் புதுச்சேரி மாநிலம் முழுவதும் பதற்றமான சூழல் நிலவுகிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Puducherry AIADMK cadres arrested for road block protest


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->