ஒரே ஆள்..ஒரே பதாகை! ராகுல்காந்தியை கண்டித்து புதுச்சேரியில் போராட்டம்! - Seithipunal
Seithipunal


இந்துக்களை வன்முறையாளர்கள் என பேசிய எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி மன்னிப்பு கேட்க கோரி புதுச்சேரி பாஜக எம்எல்ஏ தர்ணாவில் ஈடுபட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

டெல்லியில் நடைபெற்று வரும் பாராளுமன்ற கூட்டத்துறையில் எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி நேற்று உரையாற்றினார். ராகுல் காந்தி அக்னிவீர் திட்டம் குறித்து பேசியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது மற்றும் அதனைத் தொடர்ந்து இந்துக்களை தொடர்பு படுத்தி ராகுல் காந்தி சபையில் பேசியது சபை குறிப்பில் இருந்து நீக்கப்பட்டது.

இந்தநிலையில், பாராளுமன்ற கூட்டத்தில் எதிர்க்கட்சித் தலைவராக இந்துக்களை வன்முறையாளர்கள் என பேசியதாக பாஜகவினர் நாடு முழுவதும் கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர்.

இந்தநிலையில், ராகுல் காந்திக்கு கண்டனம் தெரிவிக்கும் விதமாக புதுச்சேரி பாரதிய ஜனதா கட்சி நியமன எம்.எல்.ஏ அசோக் பாபு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார். அவர் புதுச்சேரி சட்டசபை வளாகத்தில் முன்பு தரையில் அமர்ந்து கையில்  பதாகை ஏந்தி தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

பதாகையில் ராகுல் காந்தியின் இந்து சமுதாய மக்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டும் என குறிப்பிட்டிருந்தது. ராகுல் காந்திக்கு கண்டனம் தெரிவித்து பாஜக எம்எல்ஏ தர்ணா போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பெரும் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Puducherry BJP MLA dharna demanding Rahul Gandhi apology


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->