பாஜக மாநில தலைவருக்கு, வந்த அந்த மாதிரியான வீடியோ கால்! - Seithipunal
Seithipunal


புதுச்சேரி மாநில பாஜக தலைவர் சாமிநாதனுக்கு ஆபாச காணொளி அழைப்பு சம்பவம் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது.

லாஸ்பேட்டை பெத்திச்செட்டிப்பேட் புதுத்தெருவில் வசித்து வரும் சாமிநாதனின் வாட்ஸ்அப் எண்ணுக்கு, 'ஹலோ ஜி' என்றும், வீடியோ கால் ஒன்று வந்துள்ளது. 

சாமிநாதன் அந்த வீடியோ காலை எடுத்தபோது, மறுமுனையில் இளம் பெண் ஒருவர் நிர்வாணமாக இருந்துள்ளார். இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த சாமிநாதன், அழைப்பை துண்டித்துள்ளார்.

சிறிது நேரம் கழித்து, மற்றொரு அழைப்பு வந்துள்ளது. மறுமுனையில் பேசிய பெண், நீங்கள் செல்போனில் ஆபாச வீடியோவில் பதிவான காட்சி இருப்பதாகவும், ரூ.50 ஆயிரம் பணம் கொடுக்க வேண்டும் என்றும், தர மறுத்தால் வீடியோவை 'யூ-டியூப்'பில் பதிவேற்றம் செய்து விடுவதாக  சாமிநாதனை மிரட்டி உள்ளார் அந்த பெண்.

மிரட்டலுக்கு அஞ்சாத சாமிநாதன் புதுச்சேரி சைபர் கிரைம் போலீசில் புகார் அளித்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

இதற்கிடையே, இதுபோல் யாரும் பாதிக்கப்பட்டால் பணம் கொடுத்து யாரும் ஏமாற வேண்டாம் என்றும், உடனடியாக சைபர் கிரைம் போலீஸ் எண் 1930-ல் புகார் அளிக்க வேண்டும் என்றும் போலீசார் தரப்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.


 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Puducherry BJP obscene video mystery woman police investigation 


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->