புதுச்சேரியை ஆட்டிப்படைக்கும் டெங்கு: பீதியில் மக்கள்! - Seithipunal
Seithipunal


புதுச்சேரியில் கடந்த ஆண்டைவிட இந்த ஆண்டு டெங்கு காய்ச்சல் பாதிப்பு அதிகரித்துள்ளது. இந்த மாதத்தில் நாள்தோறும் சராசரியாக 11 பேர் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டு அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களிலும், அரசு மருத்துவமனைகளிலும் சிகிச்சை பெற்று வருகின்றனர். 

கடந்த ஒரு மாதமாக புதுச்சேரியில் டெங்கு காய்ச்சல் பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இந்நிலையில் புதுச்சேரியை அடுத்துள்ள கிருமாம்பாக்கம், பிள்ளையார்குப்பம், ஈச்சங்காடு உள்ளிட்ட கிராமங்களிலும் டெங்கு காய்ச்சல் வேகமாக பரவி வருகிறது. 

கிருமாம்பாக்கம் பகுதியைச் சேர்ந்தவர் பூங்காவேல் (வயது 53) இவர் பெட்ரோல் பங்கில் ஊழியராக பணியாற்றி வந்தார். இவருக்கு டெங்கு காய்ச்சல் பாதிப்பு ஏற்பட்டு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்து விட்டார். 

இதே போல் நேற்று முன்தினம் ஈச்சங்காடு கிராமத்தைச் சேர்ந்த ஜானகி (வயது 62) மற்றும் அவரது கணவர் இருவரும் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டு புதுச்சேரி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தனர். 

இதில் ஜானகி சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்து விட்டார். கிருமாம்பாக்கம் பகுதியில் டெங்கு மற்றும் மர்ம காய்ச்சலால் 100க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் தற்போது 2 பேர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. 

இதனால் சுகாதாரத்துறை அதிகாரிகள் கிருமாம்பாக்கம் பகுதியில் நோய் தடுப்பு நடவடிக்கையை தீவிரப்படுத்தி உள்ளனர். 

கடந்த ஆண்டு புதுச்சேரியில் 1673 பேர் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டனர். ஆனால் இந்த ஆண்டு இதுவரை 1724 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Puducherry Dengue attacking 2 people killed


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->