பொங்கல் பண்டிகை கூட்ட நெரிசலை தடுக்க ஏற்பாடு : நெல்லை, குமரிக்கு சிறப்பு ரெயில்கள் இயக்கம்! - Seithipunal
Seithipunal


பொங்கல் பண்டிகையை முன்னிட்டு,  சிறப்பு ரெயில்களுக்கான முன்பதிவு நாளை(ஞாயிற்றுக்கிழமை) காலை 8 மணிக்கு தொடங்குகிறது.


தமிழர் திருநாளான பொங்கல் பண்டிகை வருகிற 14-ந்தேதி கொண்டாடப்படுகிறது. பொங்கல் பண்டிகையை முன்னிட்டு,  கூட்ட நெரிசலை குறைப்பதற்காக, தெற்கு ரெயில்வே சார்பில் சிறப்பு ரெயில்கள் இயக்கப்படும். அந்த வகையில், பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, தென்மாவட்டங்களுக்கு 4 சிறப்பு ரெயில்கள் இயக்கப்பட இருப்பதாக தெற்கு ரெயில்வே அறிவித்துள்ளது. 

தாம்பரம்-கன்னியாகுமரி இடையே (வண்டி எண்-06093) வருகிற 13-ந்தேதி 20 பெட்டிகளை கொண்ட சிறப்பு ரெயில் இயக்கப்பட உள்ளது என்றும் இந்த ரெயில், தாம்பரத்தில் இருந்து இரவு 10.30 மணிக்கு புறப்பட்டு, விழுப்புரம், கடலூர் துறைமுகம், சிதம்பரம், தஞ்சாவூர், அருப்புக்கோட்டை, நெல்லை வழியாக மறுநாள் பகல் 12.30 மணிக்கு கன்னியாகுமரி சென்றடையும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் மறுமார்க்கமாக, கன்னியாகுமரி-தாம்பரம் இடையே (வண்டி எண்-06094) வருகிற 14-ந்தேதி இயக்கப்படும் சிறப்பு ரெயில், கன்னியாகுமரியில் இருந்து மாலை 3.30 மணிக்கு புறப்பட்டு, மறுநாள் காலை 6.15 மணிக்கு தாம்பரம் வந்தடையும் என்றும் தெற்கு ரெயில்வே அறிவித்துள்ளது.  

அதேபோல சென்னை சென்டிரல்-நாகர்கோவில் இடையே (வண்டி எண்-06089) வருகிற 12, 19-ந்தேதிகளில் 22 பெட்டிகளை கொண்ட சிறப்பு ரெயில் இயக்கப்பட உள்ளது என்றும்  இந்த ரெயில், சென்டிரலில் இருந்து நள்ளிரவு 11.30 மணிக்கு புறப்பட்டு, அரக்கோணம், காட்பாடி, கரூர், மதுரை, நெல்லை வழியாக மறுநாள் மதியம் 1 மணிக்கு நாகர்கோவில் சென்றடையும் என்று அறிவித்துள்ளது.

மேலும் மறுமார்க்கமாக, நாகர்கோவிலில் இருந்து (வண்டி எண்-06090) வருகிற 13, 20-ந்தேதிகளில் இயக்கப்படும் சிறப்பு ரெயில், இரவு 7 மணிக்கு புறப்பட்டு, மறுநாள் காலை 9.30 மணி்க்கு சென்டிரல் வந்தடையும் என்றும் தெற்கு ரெயில்வே அறிவித்துள்ளது..

இதேபோல நெல்லை - தாம்பரம் இடையே சிறப்பு ரெயில்கள் இயக்கப்படுகின்றன எனவும்  ஜன.12, 19, 26 ஆகிய தேதிகளில் நெல்லையிலிருந்து நண்பகல் 03.30 மணிக்கு புறப்படும் ரெயில், (06092) மறுநாள் அதிகாலை 04.10 மணிக்கு தாம்பரம் வந்தடையும் என்றும் மறுமார்க்கமாக, ஜன.13, 20, 27 ஆகிய தேதிகளில் தாம்பரத்திலிருந்து நண்பகல் 03.30 மணிக்கு புறப்படும் ரெயில் (06091) மறுநாள் அதிகாலை 04.55 மணிக்கு நெல்லை சென்றடையும் என்றும்  இந்த ரெயில்கள் சேரன்மகாதேவி, அம்பை, தென்காசி, ராஜபாளையம், சிவகாசி, விருதுநகர், மதுரை, திருச்சி, விழுப்புரம், செங்கல்பட்டு வழியாக இயக்கப்படுகின்றன என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதேபோல ராமநாதபுரத்தில் இருந்து 10,12,17 ஆகிய தேதிகளில் நண்பகல் 03.30 மணிக்கு புறப்படும் ரெயில், (06104) தாம்பரத்துக்கு அதிகாலை 3.30 மணிக்கு சென்றடையும் என்றும் மறுமார்க்கமாக 11,13,18 ஆகிய தேதிகளில் தாம்பரத்தில் இருந்து மாலை 5 மணிக்கு புறப்படும் ரெயில், காலை 5.30 மணிக்கு ராமநாதபுரம் சென்றடையும் என தெரிவிக்கப்பட்டுள்ளது . மேலும் இந்த ரெயில், பரமக்குடி, மானாமதுரை, சிவகங்கை, காரைக்குடி, புதுக்கோட்டை, மயிலாடுதுறை, சிதம்பரம், கடலூர், விழுப்புரம் வழியாக தாம்பரம் சென்றடையும் என்றும் மேற்கண்ட சிறப்பு ரெயில்களுக்கான முன்பதிவு நாளை(ஞாயிற்றுக்கிழமை) காலை 8 மணிக்கு தொடங்குகிறது என தெற்கு ரெயில்வே அறிவித்துள்ளது. 
 .


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Special trains to Tirunelveli Kanyakumari to clear Pongal rush


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->