பாம்போடு வீடியோ வெளியிட்ட விவகாரம்.. டி.டி.எப்.வாசன் வீட்டில் வனத்துறை அதிரடி சோதனை! - Seithipunal
Seithipunal


டி.டி.எப்.வாசனின்  வீட்டிற்கு காரமடை வனத்துறை அதிகாரிகள் நேரில் சென்று அதிரடி சோதனை மேற்கொண்டனர். அப்போது தடை செய்யப்பட்ட விலங்குகளை வீட்டில் வளர்த்து வருகிறாரா என்பது குறித்து சோதனை நடத்தினர்.

கோவை மாவட்டத்தை சேர்ந்த பிரபல  யூடியூப் புகழ் டி.டி. எப். வாசன் அடிக்கடி சர்ச்சையில் சிக்குவதே இவருக்கு வாடிக்கையான ஓன்று . இவர்  பைக்கை வேகமாக ஓட்டி சாகசம் செய்து சர்சையில் சிக்கினார். இவர் பைக்கை வேகமாக ஓட்டி அந்த வீடியோவை, யூடியூப்பில் வெளியிடுவார்.அந்த வீடியோவை பார்க்க பெரும் கூட்டமே இருக்கும்.  பைக்கை வேகமாக ஓட்டி சாகசம் செய்து சர்சையில் சிக்கி சிறைக்கு சென்றுவந்த கதையும் உண்டு.

இந்நிலையில் தான்  டி.டி.எப். வாசன் சமீபத்தில் மலைப்பாம்பை கையில் வைத்துக்கொண்டு வீடியோ வெளியிட்டு அந்த மலைப்பாம்பை உரிமம் பெற்று வளர்த்து வருவதாக பரபரப்பை ஏற்படுத்தினார்.  . இந்த வீடியோ சமூகவலைதளங்களில் வைரலானது. இதையடுத்து சென்னை வனத்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

இதனிடையே, டி.டி.எப்.வாசனின்  வீட்டிற்கு காரமடை வனத்துறை அதிகாரிகள் நேரில் சென்று அதிரடி சோதனை மேற்கொண்டனர். அப்போது தடை செய்யப்பட்ட விலங்குகளை வீட்டில் வளர்த்து வருகிறாரா என்பது குறித்து சோதனை நடத்தினர்.

கடைசியில் மலைப்பாம்புடன் போஸ் கொடுத்து வீடியோ வெளியிட்ட விவகாரம் தொடர்பாக யூடியூபர் டி.டி.எப்.வாசன் வீட்டில் வனத்துறை நடத்திய சோதனையில் அவர் வீட்டில் வனத்துறையால் தடை செய்யப்பட்ட விலங்குகள், பிராணிகளை அவர் வீட்டில் இல்லை என்றும் இந்த சோதனை தொடர்பான விவரங்களை சென்னை வனத்துறையினருக்கு தெரிவித்துள்ளோம்' என்று வனத்துறை அதிகாரிகள் கூறினார்கள்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

The video of the snake was released Forest department raids TTF Vasans house


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->