புதுச்சேரி | குறைந்த பணத்தில் அதிக போதை! ஒரு சாக்லேட் ரூ.10! ஒரு அதிர்ச்சி ரிப்போர்ட்! - Seithipunal
Seithipunal


புதுச்சேரியில் நடைபெறும் பெரும்பாலான குற்றங்களுக்கு அடித்தளமாக கஞ்சா விற்பனை உள்ளது. அங்குள்ள இளைஞர்கள் கஞ்சாவுக்கு அடிமையாக உள்ளதால் வேலைக்கு செல்லாமல் வாழ்க்கையை தொலைத்து ரவுடிகளாக மாறி வருகின்றனர்.

இளைஞர்கள் நாள் முழுவதும் போதையில் இருப்பதால் என்ன செய்கிறோம் என்பது தெரியாமல் கொடூரமான குற்றங்களில் சாதாரணமாக ஈடுபடுகின்றன. இது போன்ற குற்றங்களுக்கு ஆதாரமாக திகழும் கஞ்சாவை முழுவதுமாக ஒழிக்க தீவிர நடவடிக்கை எடுக்குமாறு டிஜிபி உத்தரவிட்டுள்ளார்.

உத்தரவின் பெயரில் போலீசார் கஞ்சா விற்பனை செய்யும் கும்பலை தேடி கைது செய்து சிறையில் அடைத்து வருகின்றனர். இந்நிலையில் சாதாரணமாக பெட்டி கடைகளில் கஞ்சா சாக்லேட் விற்பனை செய்வதால் பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு எளிதில் கிடைக்கின்றது.

இந்த கஞ்சா சாக்லேட் வட மாநிலங்களில் குடிசை தொழிலாக தயாரித்து குறைந்த விலைக்கு விற்பனை செய்யப்படுகிறது. பீகார், ஒடிசா போன்ற மாவட்டங்களில் இருந்து புதுச்சேரிக்கு வரும் தொழிலாளர்கள் மொத்தமாக கொள்முதல் செய்து, கஞ்சா சாக்லேட்டுகளை ரூ.10க்கு விற்பனை செய்து வருகின்றனர்.

இதனை சாப்பிடுபவர்கள் அதிகபட்சம் மூன்று மணி நேரம் போதையில் மிதக்கின்றனர்.
இந்த கஞ்சா சாக்லேட் குறைந்த பணத்தில் அதிக போதையை ஏற்படுத்துவதால் அதிக அளவில் வாடிக்கையாளர்களை கவர்கிறது. 

இதனை மற்ற சாக்லேட்டுகள் போல் சாதாரணமாக பெட்டிக்கடைகளில் டப்பாக்களில் அடைத்து விற்பனை செய்யப்பட்டு வருகிறது. அதனை அடுத்து புதுச்சேரி போலீசார் கஞ்சா சாக்லேட்டுகளை விற்பனை செய்யும் பெட்டி கடைகளை கண்காணித்து கடும் நடவடிக்கை எடுத்து வருகின்றனர். 
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Puducherry ganja chocolate selling


கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!



Advertisement

கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!




Seithipunal
--> -->