இதில் மனித உரிமையெல்லாம் கிடையாது... பொங்கியெழுந்த ஆளுநர் தமிழிசை!
Puducherry governor Tamilisai speech
புதுச்சேரியில் கடந்த இரண்டாம் தேதி 9 வயது சிறுமி கடத்தப்பட்டு பாலியல் வன்கொடுமை செய்து காவாயில் தூக்கி வீசப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
இந்த தொடர்பாக புதுச்சேரி அரசுக்கு எதிராக, எதிர்கட்சிகள் பெரும் கண்டனங்களை எழுப்புகின்றன. மேலும் இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதற்கிடையே சிறுமியின் உடல் பிரேத பரிசோதனை செய்யப்பட்ட போது பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டது உறுதி செய்யப்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது.
இந்நிலையில் இது தொடர்பாக புதுச்சேரி துணை நிலை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன், புதுச்சேரியில் 9 வயது சிறுமி படுகொலையில் மிகத் தீவிரமான நடவடிக்கையை நான் எடுப்பேன்.
சம்பந்தப்பட்ட குற்றவாளிக்கு தண்டனை பெற்று தருவதில் மனித உரிமை எல்லாம் நான் பார்க்க மாட்டேன் என தெரிவித்துள்ளார்.
English Summary
Puducherry governor Tamilisai speech