வரும் 21ம் தேதி உள்ளூர் விடுமுறை - முதலமைச்சரே நேரடி உத்தரவு! - Seithipunal
Seithipunal


ஆண்டுதோறும் நடைபெறும் மாங்கனித் திருவிழாவை ஒட்டி காரைக்கால் மாவட்டத்திற்கு வரும் 21ம் தேதி உள்ளூர் விடுமுறை அறிவித்து புதுச்சேரி முதலமைச்சர் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

புதுச்சேரி அரசு முதலமைச்சர் அலுவலகம் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது, "ஆண்டுதோறும் காரைக்காலில் நடைபெறும் பிரசித்தி பெற்ற மாங்கனித் திருவிழா இந்த ஆண்டு 2106.2024 அன்று நடைபெற உள்ளது.

இதனையொட்டி காரைக்கால் மாவட்டத்தில் உள்ள பள்ளிகள், கல்லூரிகள் மற்றும் அலுவலகங்களுக்கு உள்ளூர் பொது விடுமுறை அளிக்க வேண்டும் என்று மாண்புமிகு அமைச்சர் PRN திருமுருகன் அவர்கள் முதலமைச்சர் ந. ரங்கசாமி அவர்களிடம் இன்று (18.06 2024) கோரிக்கை வைத்தார்.

அமைச்சர் அவர்களின் கோரிக்கையை ஏற்று 21.06.2024 அன்று காரைக்கால் மாவட்டத்தில் உள்ள பள்ளிகள் கல்லூரிகள் மற்றும் அலுவலகங்களுக்கு உள்ளூர் பொது விடுமுறை அளிக்க மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் காரைக்கால் மாவட்ட ஆட்சியர் அவர்களுக்கு உத்தரவிட்டுள்ளார்" என்று அந்த அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

அறுபத்து மூன்று நாயன்மார்களில் ஒருவரான காரைக்கால் அம்மையாரின் வாழ்வில் ஒரு மாங்கனி தொடர்பாக நிகழ்ந்த மறக்க முடியாத நிகழ்வினை இன்றளவும் நினைவு கூருமுகமாக, காரைக்காலிலுள்ள சுந்தரம்பாள் உடனாய ஸ்ரீகயிலாசநாத சுவாமி கோயில் சார்பில் மாங்கனித் திருவிழா நடத்தப்பட்டு வருகிறது.

இந்நாளில் காரைக்கால் முழுவதும் விழாக்கோலமாக இருக்கும். ஒருவர் ஓருவர் மாங்கனிகளை வீசி தங்களது வேண்டுதல்களை வேண்டி கொள்வர். வேண்டுதல் ஒருபக்கம் என்றாலும் மகிழ்ச்சியே இந்த விழாவில் பெரும் பங்காற்றுகிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

 Puducherry Local Holiday mangani thiruvizha


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->