புதுச்சேரி: கிறிஸ்துமஸ் பண்டிகையை கொண்டாட டிச.24 மற்றும் 25ஆம் தேதிகளில் ஊரடங்கு தளர்வுகள் அறிவிப்பு.!
PUDUCHERRY LOCKDOWN JAN 2
புதுச்சேரியில் கொரோனா கட்டுப்பாடுகள் ஜனவரி 2ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
கொரோனா நோய்த் தொற்றுப் பரவலைக் கட்டுப்படுத்தும் வகையில் நாடு முழுவதும் பல மாநிலங்களில் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு நடைமுறையில் இருந்து வருகிறது.
தற்போது, நாட்டில் பல மாநிலங்களில் பரவி வரும் உருமாறிய கொரோனா ஒமைக்ரான் வைரஸ் நோயைக் கருத்தில் கொண்டு, தடுப்பூசி செலுத்தும் பணியினை விரைவுபடுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது\.
மேலும், பண்டிகைக் காலங்களில், கொரோனா நோய்த் தொற்று பரவலைத் கட்டுப்படுத்த நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில், புதுச்சேரியில் கொரோனா கட்டுப்பாடுகள் வரும் 2022 ஜனவரி மாதம் 2ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
மேலும், கிறிஸ்துமஸ் பண்டிகையை கொண்டாட டிச.24 மற்றும் 25ஆம் தேதிகளில் தளர்வுகள் அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
அதன்படி, ஆங்கில புத்தாண்டை கொண்டாட டிச.30, 31 மற்றும் ஜனவரி 1ஆம் தேதி தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், டிச.30, 31 மற்றும் ஜனவரி 1ஆம் தேதிகளில் அதிகாலை 2 மணி வரை மட்டுமே இந்த தளர்வுகள் வழங்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
English Summary
PUDUCHERRY LOCKDOWN JAN 2