ஜிம்மர் மருத்துவக் கல்லூரி | புதுச்சேரி மாணவர்களுக்கான இட ஒதுக்கீட்டில் வெளிமாநில மாணவர்கள் சேர்க்கை! - Seithipunal
Seithipunal


புதுச்சேரி, அரசு மருத்துவக் கல்லூரி மற்றும் தனியார் மருத்துவர் கல்லூரி ஆகியவற்றில் மாணவர் சேர்க்கைக்காக புதுவை அரசு 370 இடங்களை ஒதுக்கீடு செய்துள்ளது. 

தமிழகத்தை சேர்ந்த 162 மாணவர்களும், கேரளாவை சேர்ந்த 36 மாணவர்களும், இந்த ஆண்டு 24 எம்.பி.பி.எஸ் முதலாமாண்டு மாணவர்கள் சேர்க்கைகான நீட் தரவரிசை பட்டியலில் இடம்பெற்றுள்ளதாக புகார் எழுந்துள்ளது. 

தற்போது ஜிம்மர் மருத்துவக் கல்லூரியில் இரு வேறு மாநிலங்களில் இரட்டைக் குடியுரிமை அடிப்படையில், புதுவை மாணவர்களுக்காக ஒதுக்கீடு செய்யப்பட்டிருந்த இடங்களில் வெளி மாநில மாணவர்கள் 3பேருக்கு இடம் ஒதுக்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. 

இதற்கு புதுவை மாணவர்களும் அவர்களது பெற்றோர்களும் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். மேலும் இதில் பல்வேறு மோசடிகள் நடந்துள்ளதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது. 

இது குறித்து புதுவை கவர்னரிடம் சமூக அமைப்பினர் புகார் தெரிவித்துள்ளனர். புதுவை மாணவர்களுக்கான இட ஒதுக்கீட்டில் ஜிப்மர் மருத்துவ கல்லூரி வெளி மாநில மானவர்களுக்கு இடம் ஒதுக்கீடு செய்துள்ளது தற்போது புதுவையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

இந்த பிரச்சனை புதுவை மாணவர்கள் இடையே பெரும் கொந்தளிப்பு ஏற்பட்டுள்ளது. அந்தந்த மாநிலத்திற்கேற்ற இட ஒதுக்கீட்டின் அடிப்படையில் மாணவர்கள் சேர்க்கை நடைபெற வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Puducherry medical college admission complaint


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->