மோடி தேர்தல் பிரசாரத்துக்கு தடை: புதுச்சேரி மாவட்ட ஆட்சியரிடம் பரபரப்பு மனு!  - Seithipunal
Seithipunal


புதுச்சேரி மனித உரிமைகள் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு அமைப்பின் பொதுச் செயலாளர் முருகானந்தம் தலைமையில், புதுச்சேரி மாவட்ட ஆட்சியரிடம் மனு அளிக்கப்பட்டுள்ளது. 

அதில், தேர்தலின் போது வாக்குகளை பெற சாதி அல்லது மத வகுப்பு வாத உணர்வுகளை தூண்டிவிடக் கூடாது. ஆனால் பிரதமர் நரேந்திர மோடி ராஜஸ்தான் தேர்தல் பிரசார பொதுக்கூட்டத்தில் முஸ்லிம்களுக்கு எதிராக பேசியிருந்தார். 

இதன்முலம் தேர்தல் நடத்தை விதிமுறைகளை பிரதமர் நரேந்திர மோடி மீது உள்ளார். அவரது பேச்சின் தாக்கம் இந்துக்கள் மற்றும் முஸ்லிம்கள் ஆகிய இருவரது மனங்களில் வெறுப்புணர்வை ஏற்படுத்தி உள்ளது. 

தேர்தலில் வெற்றி பெற்று, அதிகாரத்தை கைப்பற்ற வேண்டும் என்ற நோக்கத்தில் இந்தியாவில் மத வெறுப்புணர்வை பிரதமர் நரேந்திர மோடி ஏற்படுத்துகிறார். 

இதனால் அவர் மீது தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் அவரது தேர்தல் பிரசாரத்திற்கு தடை விதிக்க வேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளது.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Puducherry Modi election campaign ban 


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->