பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு கஞ்சா சப்லை! கையும் களவுமாக சிக்கிய 2 வாலிபர்கள்! - Seithipunal
Seithipunal


புதுச்சேரியில் கஞ்சா விற்பனையை தடுக்க போலீசார் தொடர்ந்து தீவிர நடவடிக்கைகள் எடுத்து வருகின்றனர். இருப்பினும் கஞ்சா விற்பனையை முற்றிலுமாக தடுக்க இயலவில்லை. ஆங்காங்கே கஞ்சா விற்பனை நடந்து கொண்டு தான் உள்ளது. 

இந்நிலையில் ரெட்டியார்பாளையம் கம்பன் நகர் சந்திப்பில் மாணவர்களுக்கு கஞ்சா விற்பனை செய்வதாக ரெட்டியார் பாளையம் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. 

தகவலின் பேரில் போலீசார் அந்த பகுதியில் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர். அப்போது அந்த பகுதியில் சந்தேகத்திற்கு இடம் அளிக்கும் விதமாக நின்று கொண்டிருந்த இரண்டு வாலிபர்களை பிடித்து அவர்களை சோதனை செய்தனர். 

பின்னர் அவர்களது சட்டையைபையில் சிறு சிறு கஞ்சா போடலங்கள் இருப்பதை போலீசார் கண்டுபிடித்தனர். மொத்தமாக அவர்களிடம் 300 கிராம் கஞ்சா வைத்திருந்தனர்.

மேலும் விசாரணையில் அவர்கள் உழவர்கரை வயல்வெளி தெருவை சேர்ந்த லெனின் பிஷப் (வயது 21) மற்றும் ரெட்டியார் பாளையம் கம்பன் நகரை சேர்ந்த ஹரீஷ் (வயது 22) என்பது தெரியவந்தது. 

இவர்கள் பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்கு கஞ்சா விற்பனை செய்து வந்துள்ளனர். இதனை தொடர்ந்து இருவரையும் போலீசார் கைது செய்து அவர்களிடம் இருந்த கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Puducherry school and college students ganja supply


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->