அரசு பள்ளிகளின் நேரம் மாற்றம் - புதுவை பள்ளிக்கல்வித்துறை அதிரடி! - Seithipunal
Seithipunal


புதுச்சேரியில் சிபிஎஸ்இ பாடத்திட்டம் நடைமுறைக்கு வந்ததால், புதுச்சேரி அரசு பள்ளிகளில் நேரம் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. 

அதன்படி, இனி அரசு பள்ளிகள் அரை மணி நேரம் முன்னதாக காலை 9 மணிக்கு தொடங்கி, மாலை 4:20 வரை நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 

சிபிஎஸ்சி பாடத்திட்டத்திற்கு ஏற்ப எட்டு பாட வேலைகளாக பள்ளிகள் செயல்படும் என்றும் புதுச்சேரி பள்ளி கல்வித்துறை தற்போது அறிவித்துள்ளது.

புதுச்சேரியில் மாற்றப்பட்ட பள்ளி நேரங்கள் ஜூன் 15ஆம் தேதி, காமராஜர் பிறந்தநாள் அன்று முதல் அமலுக்கு வருவதாகவும், புதுச்சேரி பள்ளி கல்வித்துறை கல்வித்துறை இயக்குநர் பிரியதர்ஷினி, பள்ளி முதல்வர்களுக்கு சுற்றறிக்கை அனுப்பி உள்ளார். 


நர்சிங் படிப்பில் (சென்டாக்) அரசு ஒதுக்கீட்டிற்கான இடங்களை நிரப்புவதற்கான எழுத்து தேர்வு

புதுச்சேரியில் பி.எஸ்.சி நர்சிங் படிப்பில் (சென்டாக்) அரசு ஒதுக்கீட்டிற்கான இடங்களை நிரப்புவதற்கான எழுத்து தேர்வு வரும் 14-ம் தேதி  (ஞாயிற்றுக்கிழமை) நடைபெறும் என புதுச்சேரி சுகாதாரத் துறை அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

புதுச்சேரியில் 6- மையங்களிலும், காரைக்காலில் 2-மையங்களிலும், மாஹே மற்றும் ஏனாமில் தலா 1 மையங்களிலும் .எஸ்.சி நர்சிங் படிப்பில் (சென்டாக்) அரசு ஒதுக்கீட்டிற்கான இடங்களை நிரப்புவதற்கான எழுத்து தேர்வு நடைபெறும் என்றும் அந்த அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Puducherry School Timing change CBSC


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->