விடிய விடிய கொட்டி தீர்த்த மழை: பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை! - Seithipunal
Seithipunal


தென்கிழக்கு வங்க கடல் பகுதியில் உருவான காற்றழுத்தம் வலுப்பெற்று தாழ்வு மண்டலமாக மாறி உள்ளது. இதனால் தமிழகம், புதுச்சேரி உள்ளிட்ட பகுதிகளில் கன மழை பெய்ய செய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. 

கிழக்கு திசையில் இருந்து வீசும் காற்றின் வேக மாறுபாடு காரணமாக புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் வருகின்ற 19ஆம் தேதி வரை மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

மேலும் 2 நாட்கள் கடலோர பகுதி 55 கிலோமீட்டர் வேகத்தில் சூறாவளி காற்று வீசும் என்பதால் மீனவர்கள் கடலுக்குச் செல்ல வேண்டாம் என தடை விதிக்கப்பட்டது. 

புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் கனமழை எச்சரிக்கை காரணமாக பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அளித்துள்ளது. 

இந்நிலையில் நேற்று காலை முதல் புதுச்சேரியில் வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது. மாலை சுமார் 6 மணி அளவில் லேசான மழை பெய்தது. 

புதுச்சேரியில் நேற்று மாலை 6 மணி முதல் இன்று காலை 6 மணி வரை 50 சென்டிமீட்டர் மழை பதிவாகியுள்ளது. இன்று காலை முதல் மழை பெய்து வருவதால் தாழ்வான பகுதிகளில் மழை நீர் தேங்கியுள்ளது. மேலும் தொடர் மழை காரணமாக பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Puducherry schools and colleges are closed


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->