என் சாவுக்கு பிரதமர் மோடி தான் காரணம்! கடிதம் எழுதிவைத்துவிட்டு போராட்டத்தில் குதித்த விவசாயி!
Punjab farmers fasting protest
பயிர்களுக்கு குறைந்தபட்ச ஆதார விலை (எம்எஸ்பி) உள்ளிட்ட 13 கோரிக்கைகளை வலியுறுத்தி, உத்தரபிரதேசம் மற்றும் ஹரியானா மாநிலங்களின் டெல்லி எல்லைகளில் விவசாயிகள் தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகின்றனர்.
இந்த வாரத்தின் தொடக்கத்தில், டெல்லி நோக்கி சென்ற விவசாயிகளின் மீது போலீசார் கண்ணீர் புகைகுண்டு வீசி கலைக்க முற்பட்டனர், இருப்பினும் மத்திய அரசு நடவடிக்கை எடுக்கும்வரை போராட்டம் முடிவடையாது என விவசாயிகள் உறுதியளித்துள்ளனர்.
இதில், நவம்பர் 26 முதல் பஞ்சாப் விவசாயி தலைவர் ஜக்ஜித் சிங் தலேவால் நடத்தும் உண்ணாவிரத போராட்டம் தற்போது 17வது நாளை எட்டி உள்ள நிலையில், பிரதமர் மோடிக்கு கடிதம் ஒன்றை எழுதியுள்ளார்.
அதில், பயிர்களுக்கு எம்எஸ்பி சட்டப்பூர்வ உரிமை வழங்க வேண்டும். இந்த போராட்டத்தில் நான் இறந்தால் மத்திய அரசும், பிரதமரும் தான் பொறுப்பு" என்று தெரிவித்துள்ளார். தற்போது ஜக்ஜித் சிங் தலேவால் 11 கிலோ எடை குறைந்துள்ளார். அவரின் உடல் நிலையை மருத்துவர்கள் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர்.
இதற்கிடையே, அமெரிக்காவின் கலிபோர்னியாவில் உள்ள புலம்பெயர் இந்தியர்கள் ஜக்ஜித் சிங் தலேவாலுக்கு ஆதரவாக ஒரு நாள் உண்ணாவிரதம் கடைபிடிக்க திட்டமிட்டுள்ளனர்.
English Summary
Punjab farmers fasting protest