பொங்கல் பண்டிகை - புதுச்சேரியில் குடும்ப அட்டைத்தாரர்களுக்கு ரூ. 750 அறிவிப்பு.! - Seithipunal
Seithipunal


வருகின்ற 15 ஆம் தேதி தமிழகம் முழுவதும் பொங்கல் பண்டிகை கொண்டாடப்படவுள்ளது. இதனை முன்னிட்டு தமிழகத்தில் பச்சரிசி, சர்க்கரை, முழு கரும்பு என்று பொங்கல் பொருட்கள் வினியோகிக்கப்படவுள்ளன. இந்த பொங்கல் பொருட்கள் வழங்குவதற்கான டோக்கன் இன்று முதல் வழங்கப்பட்டு வருகிறது. 

தமிழகத்தின் பொங்கல் பரிசுத் தொகுப்பு அறிவிப்பினை தொடர்ந்து புதுச்சேரியிலும் மக்களுக்கு பொங்கல் பொருட்கள் மீதான ஆர்வம் அதிகரித்தது. இந்த நிலையில், புதுச்சேரியில் பொங்கல் பரிசுத்தொகுப்பிற்கு பதிலாக அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் ரூ.750 வழங்கப்படும் என்று அம்மாநில முதலமைச்சர் ரங்கசாமி அறிவித்துள்ளார். 

இந்த தொகை குடும்ப அட்டைதாரர்களின் வங்கிக்கணக்கில் செலுத்தப்படவுள்ளது. புதுச்சேரியில் கடந்த ஆண்டைப்போலவே இந்த ஆண்டும் குடும்ப அட்டைதாரர்களுக்கு பணமாகவே பொங்கல் பரிசு வழங்கப்படுகிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

puthuchery govt announce rs 750 to peoples for pongal gift


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->