உங்களுக்கும் அதானிக்கும் என்ன உறவு? மோடியை விலாசும் ராகுல் காந்தி.!! - Seithipunal
Seithipunal


உங்களுக்கும் அதானிக்கும் என்ன உறவு? மோடியை விலாசும் ராகுல் காந்தி.!!

காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவரான ராகுல்காந்தி நேற்று தனது சமூக வலைத்தள பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த பதிவில், அவர் தெரிவித்து இருப்பதாவது:-

"பிரதமரே, உங்களிடம் நான் ஒரு கேள்வி எழுப்பி நீண்ட நாட்கள் ஆகிவிட்டது. அந்த கேள்விக்கு இதுவரைக்கும் நீங்கள் பதில் அளிக்கவில்லை. அதனால் மறுபடியும் நான் கேள்வி கேட்கிறேன்.

அதானிக்கு சொந்தமான போலி கம்பெனிகளில் போடப்பட்டுள்ள ரூ.20 ஆயிரம் கோடி, யாருடைய பணம்? என்ன உறவு? 

எல்.ஐ.சி., பாரத ஸ்டேட் வங்கி, தொழிலாளர் வருங்கால வைப்புநிதி அமைப்பு உள்ளிட்டவற்றில் முதலீடு செய்துள்ள மக்கள் பணம், அதானிக்கு ஏன் கொடுக்கப்பட்டது? உங்களுக்கு அதானியுடன் என்ன உறவு என்று நாட்டுக்கு உண்மையை சொல்லுங்கள்" என்று அவர் தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

ragul gandhi question raised to modi for adani issue


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->