அதானியின் ஊழலை பிரதமர் மோடி மறைக்கிறார்: ராகுல் காந்தி பரபரப்பு குற்றசாட்டு!
Rahul Gandhi accuses PM Modi of hiding Adani scam
அமெரிக்காவில் கூட பிரதமர் மோடிஜி, அதானியின் ஊழல்களை மறைக்கிறார் என்று ராகுல் காந்தி விமர்சனம் செய்துள்ளார்.
ஐந்து நாட்கள் பயணமாக பிரான்ஸ், அமெரிக்கா சென்ற பிரதமர் மோடி தனது சுற்றுப்பயணத்தை நிறைவு செய்துவிட்டு நாடு திரும்பினார்.இந்தநிலையில் தொழிலதிபர் அதானி மீது அமெரிக்க கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டு உள்ளது என்றும் பிரதமர் மோடி அமெரிக்கா சென்றுள்ள நிலையில், அந்த நாட்டு ஜனாதிபதி டிரம்புடன் இது குறித்து பேசவில்லை என கூறியுள்ளார்.. மேலும் தனிப்பட்ட விவகாரங்கள் குறித்து இரு நாடுகளின் தலைவர்கள் பேசுவது இல்லை என அவர் விளக்கம் அளித்தார் என்றும் பிரதமரின் இந்த கருத்துக்கு மக்களவை எதிர்க்கட்சித்தலைவர் ராகுல் காந்தி கண்டனம் தெரிவித்து உள்ளார்.
![](https://img.seithipunal.com/media/amith 2-2rbfm.jpg)
இது தொடர்பாக அவர் தனது எக்ஸ் தளத்தில் கூறியிருப்பது, 'அதானி விவகாரம் குறித்து இந்தியாவில் நீங்கள் கேள்வி எழுப்பினால், மவுனமே பதிலாக இருக்கும் என்றும் வெளிநாட்டில் கேள்வி கேட்டால், அது தனிப்பட்ட விவகாரமாகி விடும் என்றும் அமெரிக்காவில் கூட மோடிஜி, அதானியின் ஊழல்களை மறைக்கிறார்' என ராகுல் காந்தி குற்றம் சாட்டியுள்ளார்.
English Summary
Rahul Gandhi accuses PM Modi of hiding Adani scam