100வது நாளை கொண்டாடும் ராகுல் காந்தி..!! ஜெய்பூரில் பிரம்மாண்ட ஏற்பாடு..!!
Rahul Gandhi celebrating 100th day of Bharat jodo yatra
காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ராகுல் காந்தி கட்சியை வலுப்படுத்தும் நோக்கில் கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரை பாரத் ஜோடோ எனும் ஒற்றுமையாத்திரை பயணத்தை மேற்கொண்டு வருகிறார். கடந்த செப்டம்பர் 7ஆம் தேதி கன்னியாகுமரியில் தொடங்கிய இந்த பயணம் தமிழகம், கேரளா, கர்நாடக, ஆந்திரா, தெலுங்கானா, மகாராஷ்டிரா மாநிலத்தை தொடர்ந்து தற்பொழுது ராஜஸ்தானை அடைந்துள்ளது.
ராகுல் காந்தி 150 நாட்களில் 12 மாநிலங்களைக் கடந்து 3500 கிலோமீட்டர் தூரத்தை கடக்க திட்டமிட்டுள்ளார். ராகுல் காந்தியின் இந்த பயணம் இன்றுடன் 100வது நாளை எட்டியுள்ளது. இதனை சிறப்பிக்கும் விதமாக காங்கிரஸ் கட்சியை ஜெய்பூரில் பிரம்மாண்ட ஏற்பாடு செய்துள்ளது. இந்த நிகழ்ச்சியில் ராகுல் காந்தி கலந்து கொண்டு சிறப்புரையாற்ற உள்ளார். ராகுல் காந்தியின் இந்த ஒற்றுமை பயணம் வரும் பிப்ரவரி மாதம் முதல் வாரத்தில் ஜம்மு காஷ்மீரில் கொடி ஏற்றத்துடன் நிறைவு செய்ய திட்டமிடப்பட்டுள்ளது.
English Summary
Rahul Gandhi celebrating 100th day of Bharat jodo yatra