மக்கள் அழுத்தமே காரணம்:மணிப்பூர் முதல் மந்திரி ராஜினாமா குறித்து ராகுல் காந்தி கருத்து!  - Seithipunal
Seithipunal


பெருகி வரும் மக்கள் அழுத்தம், சுப்ரீம் கோர்ட் விசாரணை மற்றும் காங்கிரசின் நம்பிக்கையில்லா தீர்மானம் ஆகியவற்றால் மணிப்பூர்முதல் மந்திரி பைரன் சிங்கின் ராஜினாமா செய்துள்ளார் என  காங்கிரஸ் எம்.பி.யும், மக்களவை எதிர்க்கட்சி தலைவருமான ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். 

கடந்த 2023ஆண்டு மே மாதம் மணிப்பூரில் மெய்தி - குக்கி சமூகங்களுக்கு இடையே   கடும் மோதல் ஏற்பட்டது, இதையடுத்து அது கலவரமாக மாறியது. மேலும் மெய்தி மக்களை, பழங்குடிப் பட்டியலில் சேர்க்கும் பரிந்துரையை எதிர்த்து குக்கி பழங்குடியின மக்கள் நடத்திய அமைதிப் பேரணியில் வன்முறை வெடித்தது.

இந்த வன்முறையில், பல நூறு பேர் கொல்லப்பட்டு, பெண்கள் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு, வீடுகள் சூறையாடப்பட்டு, பல மக்கள் வீடுகளற்ற அகதிகளாக மாறினர். மேலும், குக்கி பழங்குடியினத்தைச் சேர்ந்த இரண்டு பெண்கள் நிர்வாணமாக இழுத்துச் செல்லப்பட்ட வீடியோ வெளியாகி நாட்டையே உலுக்கியது. மணிப்பூர் மாநிலமே  தற்போது வரை மணிப்பூர் மாநிலம் இயல்பு நிலைக்கு திரும்பாமல் பதற்றத்துடனே காணப்படுகிறது

இந்தநிலையில் மாநிலத்தில் நடந்த கலவரத்துக்கு ஆளும் பா.ஜ.க. முதல் மந்திரி பைரன் சிங்கிற்கு தொடர்பு உள்ளதாக சர்ச்சை எழுந்தது. இது தொடர்பாக ஆடியோ பதிவுகள் வெளியாகின.

இதையடுத்து  மணிப்பூர் முதல் மந்திரி பைரன் சிங் தனது முதல்வர் பதவியை நேற்று ராஜினாமா செய்வதாக அறிவித்தார். தனது ராஜினாமா கடிதத்தை இம்பாலில் உள்ள ராஜ்பவனில் ஆளுநர் அஜய்குமார் பல்லாவிடம் பைரன் சிங் வழங்கினார்.

இந்நிலையில், காங்கிரஸ் எம்.பி.யும், மக்களவை எதிர்க்கட்சி தலைவருமான ராகுல் காந்தி எக்ஸ் வலைதளத்தில் வெளியிட்டுள்ள செய்தியில், பெருகி வரும் மக்கள் அழுத்தம், சுப்ரீம் கோர்ட் விசாரணை மற்றும் காங்கிரசின் நம்பிக்கையில்லா தீர்மானம் ஆகியவற்றால் முதல் மந்திரி பைரன் சிங்கின் ராஜினாமா செய்துள்ளார் என பதிவிட்டுள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Rahul Gandhi reacts to Manipur CMs resignation due to public pressure


கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!



Advertisement

கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!




Seithipunal
--> -->