மதச்சார்பற்ற நெறிகளை பாதுகாப்பதே நோக்கம்... யாத்திரையின் நிறைவு விழாவில் ராகுல் காந்தி பேச்சு..!! - Seithipunal
Seithipunal


காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ராகுல் காந்தி கன்னியாகுமரியில் இருந்து காஷ்மீரின் ஸ்ரீநகர் வரை 3,080 கிலோமீட்டர் தூரத்தை 136 நாட்களில் பாரத் ஜோடோ மாத்திரை பயணத்தை மேற்கொண்டார். ஸ்ரீநகரில் இன்று ஒற்றுமை யாத்திரை பயணத்தின் நிறைவு விழா நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த விழாவில் ராகுல் காந்தி பேசியதாவது "காஷ்மீரிகள் என்னை தாக்கலாம் என பலர் எச்சரித்தனர்.

ஆனால் இவர்கள் எனக்கு அன்பை மட்டுமே பொழிந்தனர். எனக்கு கையெறி குண்டுகளை வழங்கவில்லை. அன்பை மட்டுமே வழங்கினர். இந்த நாட்டின் அடித்தளத்தை அழிக்க நினைக்கும் சித்தாந்தத்திற்கு எதிராக நிற்பதும், இந்தியாவின் மதசார்பற்ற நெறிகளை பாதுகாப்பதும் இந்திய ஒற்றுமை யாத்திரை பயணத்தின் நோக்கம் ஆகும்.

காஷ்மீருக்குச் சென்றால் கையெறி குண்டுகள் வீசப்படலாம் என அதிகாரிகள் எச்சரித்தனர். இந்த நடை பயணம் எனது முன்னேற்றத்திற்காகவோ, காங்கிரசின் நலனுக்காகவோ மேற்கொள்ளவில்லை. நமது நாட்டின் கட்டமைப்பையே மாற்ற முயலும் சித்தாந்தத்திற்கு எதிராகவே நடைபயணம் மேற்கொண்டேன்.

எனக்கு பயமில்லாமல் வாழ எனது குடும்பத்தினரும் மகாத்மா காந்தியும் கற்றுக் கொடுத்துள்ளனர். இந்த நாட்டு மக்களின் ஒற்றுமைக்காகவே நடைபயணம் மேற்கொண்டேன். ஜம்மு காஷ்மீரில் பாஜக தலைவர்கள் யாரும் இவ்வாறு நடந்து வர முடியாது. ஒருபோதும் பாஜக தலைவர்கள் இதுபோன்று செய்ய மாட்டார்கள். ஏனென்றால் அவர்கள் காஷ்மீரில் நடப்பதற்கு பயப்படுகின்றனர்" என விழா மேடையில் பேசியுள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Rahul Gandhi said yatra aim is to protect secular values


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->