சர்தார் வல்லபாய் படேலின் இரும்புக்கரம் இந்தியாவை ஒன்றிணைக்கும் - காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி - Seithipunal
Seithipunal


சுதந்திரப் போராட்ட வீரரும், இந்தியாவின் முதல் உள்துறை அமைச்சருமான சர்தார் வல்லபாய் படேலின் 147வது பிறந்தநாளை முன்னிட்டு, காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி அஞ்சலி செலுத்தினார்.

காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, 'இந்திய ஒற்றுமை பயணம்' என்ற பெயரில் கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரை பாதயாத்திரை மேற்கொண்டு உள்ளார். கன்னியாகுமரியில் கடந்த செப்டம்பர் 7-ந்தேதி துவங்கிய பாதயாத்திரை தற்போது தெலுங்கானாவில் நடைபெற்று வருகிறது. 

இந்நிலையில், சர்தார் வல்லபாய் படேலின் 147வது பிறந்தநாள் தினத்தை ஒட்டி அவரது உருவப்படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்திய ராகுல் காந்தி தனது ட்விட்டர் பதிவில்,

"சர்தார் வல்லபாய் படேலின் இரும்புக்கரம் இந்தியாவை ஒன்றிணைக்கும். அவர் பற்றவைத்த ஒற்றுமையின் சுடரை முன்னெப்போதையும் விட பிரகாசமாகப் பிரகாசிக்க வைப்பதே அவருக்குச் செலுத்தும் மிகவும் பொருத்தமான அஞ்சலியாகும்" என்று தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Rahul Gandhi syas Sardar Vallabhbhai Patel ironclad will united India


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->