வயநாடு தொகுதியை கைவிட்ட ராகுல்... வெளியான அதிகாரப்பூர்வ தகவல்.!
Rahul gave up Wayanad constituency
அண்மையில் நடைபெற்ற முடிந்து மக்களவைத் தேர்தலில் உத்தர பிரதேசத்தின் ரேபரேலி, கேரள மாநிலத்தின் வயநாடு ஆகிய இரண்டு தொகுதிகளில் ராகுல் காந்தி போட்டியிட்டார்.
இரு தொகுதிகளிலும் வெற்றி பெற்ற ராகுல் காந்தி தேர்தல் முடிவுகள் வெளியான ஜூன் 4 ஆம் தேதியிலிருந்து 14 ஆம் தேதிக்குள் ஏதாவது ஒரு தொகுதியின் எம்.பி. பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் என்பது கட்டாயம்.
இந்நிலையில் வயநாட்டில் 3.6 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற ராகுல் காந்தி வயநாடு தொகுதி எம்.பி. ஆக பதவி ஏற்க போவதில்லை என நேற்று தெரிவித்திருந்தார்.
இதனை தொடர்ந்து இதுகுறித்து மக்களவை சபாநாயகர் அலுவலகத்துக்கு ராகுல் காந்தி கடிதம் மூலமாக அதிகாரப்பூர்வமான தகவலை தெரிவித்துள்ளார்.
அதில் ரேபரேலி தொகுதியை தக்க வைப்பதாக ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். வயநாட்டில் நடைபெற உள்ள இடைத்தேர்தலில் பிரியங்கா காந்தி முதல் முறையாக காங்கிரஸ் வேட்பாளராக போட்டியிட உள்ளது குறிப்பிடத்தக்கது.
English Summary
Rahul gave up Wayanad constituency