காங்கிரஸ் தங்களுக்கு இதனை மட்டும் விட்டுக் கொடுக்க வேண்டும்! கம்யூனிஸ்டு கட்சி!  - Seithipunal
Seithipunal


கேரளா, வயநாடு தொகுதியில் கடந்த பாராளுமன்ற தேர்தலில் ராகுல் காந்தி போட்டியிட்டு வெற்றி பெற்றார். அப்போது ராகுல் காந்தியை எதிர்த்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சி போட்டியிட்டது. 

ராகுல் காந்தி தேர்தலில் வெற்றி பெற்ற பிறகு வயநாடு தொகுதிக்கு தனி கவனம் செலுத்தி வந்தார். அதேபோல் வருகின்ற பாராளுமன்ற தேர்தலில் ராகுல் காந்தி வயநாடு தொகுதியில் போட்டியிட உள்ளார். 

இந்நிலையில் காங்கிரஸ் தலைமையில் பா.ஜ.கவை வீழ்த்த இந்தியா என்ற கூட்டணி கட்சி அமைக்கப்பட்டுள்ளது. இந்தியா கூட்டணியில் மார்க் கம்யூனிஸ்ட் மற்றும் இந்தியா கம்யூனிஸ்ட் கட்சிகள் இடம் பெற்றுள்ளன. 

வருகின்ற பாராளுமன்ற தேர்தலில் வயநாடு தொகுதியை காங்கிரஸ் தங்களுக்கு விட்டுக் கொடுக்க வேண்டும் என இந்திய கம்யூனிஸ்ட் கட்சி தெரிவித்துள்ளது. 

இதனால் ராகுல் காந்தி வயநாடு தொகுதியில் போட்டியிட வேண்டாம் என இந்திய கம்யூனிஸ்ட் கட்சி திட்டமிட்டுள்ளது. மேலும் ராகுல் காந்தி பாஜகவை எதிர்த்து அமேதி தொகுதியில் களமிறங்க வேண்டும் என கம்யூனிஸ்ட் கட்சிகள் தெரிவித்துள்ளன. 

இது குறித்து டெல்லியில் நடைபெற்ற இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய தலைமை கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது. இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் கேரளா பிரிவு அதிகாரப்பூர்வமாக இந்த கோரிக்கையை காங்கிரஸ் தலைமைக்கு தெரிவிக்கும். 

பாரதிய ஜனதா கட்சியை எதிர்த்து முக்கிய தலைவரான ராகுல் காந்தி போட்டியிட வேண்டும் என இந்திய கம்யூனிஸ்ட் கருதப்படலாம் என தெரிகிறது. இது குறித்து அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளர் கே.சி. வேணுகோபால் தெரிவிக்கையில், மத்திய தேர்தல் குழு எங்கள் வேட்பாளர் மற்றும் தொகுதிகள் குறித்து முடிவு எடுக்கும். குழு இன்னும் எந்த ஒரு முடிவும் எடுக்கவில்லை என்றார். 

இது குறித்து கேரள காங்கிரஸ் தலைவர் தெரிவிக்கையில், ராகுல் காந்தி வயநாட்டில் போட்டியிடுவது குறித்து காங்கிரஸ் முடிவெடுக்கும். 

இது தொடர்பான கருத்துக்களை இந்திய கம்யூனிஸ்ட் கட்சி தெரிவிக்கவும் உரிமை உண்டு. ராகுல் காந்தியை மீண்டும் வயநாட்டில் களமிறக்குமாறு நாங்கள் ஏற்கனவே கோரிக்கை விடுத்துள்ளோம் என்றார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Rahul not contest Wayanad constituency Communist Party opposition


கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!



Advertisement

கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!




Seithipunal
--> -->