ரெயில்வே ஓட்டுனர்களுக்கு 9 மணி நேரம் மட்டுமே வேலை - ரெயில்வே வாரியம் உத்தரவு.! - Seithipunal
Seithipunal


ரெயில்வே ஓட்டுனர்களுக்கு 9 மணி நேரம் மட்டுமே வேலை - ரெயில்வே வாரியம் உத்தரவு.!

மத்தியப் பிரதேசம் மாநிலத்தில் உள்ள ஷாதோல் மாவட்டத்தில் கடந்த 19-ம் தேதி இரண்டு சரக்கு ரெயில்கள் மோதி விபத்துக்குள்ளானது. இதனால், ரயில் இன்ஜின்கள் தடம்புரண்டு தீப்பிடித்ததில், நான்கு பேர் காயமடைந்தனர். இந்த விபத்துக் குறித்து விசாரணை செய்ததில் சரக்கு ரயில் ஓட்டுநர் 14 மணி நேரம் பணியில் இருந்தது தான் காரணம் என்று தெரிய வந்தது.

இந்த நிலையில், ரயில்வே வாரியம் அனைத்து ரயில்வே மண்டல மேலாளர்களுக்கு சுற்றறிக்கை ஒன்று அனுப்பியுள்ளது. அந்த சுற்றறிக்கையில், "ரயில் ஓட்டுநர்களுக்கு 9 மணி நேரம் பணி வழங்க வேண்டும். தவிர்க்க முடியாத ஒரு சில நேரங்களில் மட்டும் கூடுதலாக இரண்டு மணிநேரம் பணியை நீட்டிக்கலாம். 

இதனை சம்பந்தப்பட்ட ஓட்டுநர்களுக்கு முன்கூட்டியே தெரிவிக்க வேண்டும்" என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த சுற்றறிக்கைத் தொடர்பாக ரயில் ஓட்டுநர்கள் சிலர் தெரிவித்ததாவது:- ஒன்பது மணி நேரம் பணி என்பது புது அறிவிப்பு இல்லை. ஏற்கெனவே நடைமுறையில் இருப்பது தான். 

ஆனால், ரயில்வே மண்டலங்கள் இதை சரியாக பின்பற்றுவதில்லை. இந்த அறிவிப்பில், இரட்டை நிலைபாடு உள்ளது. ரயில்வே வாரியத்தின் இந்த உத்தரவை அனைத்து ரயில்வே மண்டலங்களும் முறையாக கடைபிடித்து, நடைமுறைப்படுத்தினால் மட்டுமே ரயில் ஓட்டுநர்கள் தங்களது பணியை நிம்மதியாக மேற்கொள்ள முடியும்" என்று அவர்கள் தெரிவித்துள்ளனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

railway department announce nine hours work to railway drivers


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->