ரெயில் விபத்தில் உயிரிழந்த தமிழர்களுக்கு நிவாரணம் அறிவிப்பு..! - Seithipunal
Seithipunal


கேரளா மாநிலத்தில் உள்ள பாலக்காடு மாவட்டம், ஷோரனூர் பகுதியில் தண்டவாளத்தை தூய்மைபடுத்தும் பணியில் ஒப்பந்த ஊழியர்கள் ஈடுபட்டு வருகின்றனர். அதன் படி பரதபுழா என்ற நதியின் மீது கட்டப்பட்டுள்ள ரயில்வே மேம்பாலத்தில் தமிழகத்தை சேர்ந்த  நான்கு பேர் நேற்று மாலை தூய்மைப் பணியில் ஈடுபட்டிருந்தனர்.

அப்போது கேரளா எக்ஸ்பிரஸ் விரைவு ரயில் ரயில்வே மேம்பாலத்தின் மீது வந்தது. இதை பார்த்து அதிர்ச்சியடைந்த 4 பேரும் மறுமுனையை நோக்கி ஓடினர். ஆனால், அதற்குள் விரைவு ரயில் அவர்கள் மீது மோதியது. இந்த விபத்தில் நான்கு பேரும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். 

இதில் மூன்று பேரின் உடல்கள் பரதபுழா நதியில் விழுந்தன. அவர்களின் உடல்கள் உடனடியாக மீட்கப்பட்டன. ஆனால், ஒருவரின் உடல் நதியில் அடித்துச் செல்லப்பட்டது. அதனை தேடும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

இந்த சம்பவம் குறித்து ரெயில்வே அதிகாரிகள் தெரிவித்துள்ளதாவது:- "தொழிலாளர்களை பணியில் அமர்த்திய நிறுவனத்தின் ஒப்பந்தத்தை ரத்து செய்வதற்கான நடவடிக்கை தொடங்கப்பட்டுள்ளது.

உள்வரும் ரயில்களில் தொழிலாளர்களின் பாதுகாப்பை உறுதி செய்யத் தவறியதற்காக ஒப்பந்ததாரர் மீது கிரிமினல் வழக்கும் பதிவு செய்யப்பட்டுள்ளது.  உயிரிழந்த நபர்களுக்கு ரூ. 1 லட்சம் கருணைத் தொகை வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இறந்த தொழிலாளர்களின் குடும்பங்களுக்கு விரைவில் நிவாரணம் வழங்கப்படும் என்றுத் தெரிவிக்கப்பட்டுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

railway department compensation to train accident died peoples


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->