அத்துமீறலில் ஈடுபட்ட அப்துல்! போலீசாருக்கு பயந்து பிறப்புறுப்பை அறுத்த கொடூரம்! - Seithipunal
Seithipunal


போலீசாரின் கைது நடவடிக்கைக்கு பயந்து, குற்றவாளி தனது பிறப்புறுப்பை அறுத்துக் கொண்ட சம்பவம் ராஜஸ்தான் மாநிலத்தில் அரங்கேறியுள்ளது.

ராஜஸ்தான் மாநிலத்தின் தலைநகர் ஜெய்ப்பூரில் கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவு பெண்களிடம் பாலியல் ரீதியாக மாற்றுத்திறனாளி நபர் ஒருவர் அத்துமிரலில் ஈடுபட்டதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

தகவலை அடுத்து சம்பவ இடத்துக்கு விரைந்து சென்ற போலீசார் அத்துமிரலில் ஈடுபட்ட அப்துல் வாசித் (35 வயது) என்ற அந்த மாற்றுத் திறனாளி வாலிபரை கைது செய்து காவல் நிலையம் அழைத்து வந்து விசாரணை மேற்கொண்டு வந்தனர்.

இந்த நிலையில் நேற்று இரவு தன்னை போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்து விடுவார்களோ என்ற அச்சப்பட்ட அப்துல்,  தான் கழிவறை செல்ல வேண்டும் என்று போலீசாரிடம் கேட்டுக் கொண்டுள்ளார்.

இதனை அடுத்து போலீசார் அவரை கழிவறைக்கு அழைத்துச் சென்று விட்டுள்ளனர். கழிவறைக்கு உள்ளே சென்ற அப்துல் தான் மறைத்து வைத்திருந்த கூர்மையான கத்தியால் தனது பிறப்புறுப்பை அறுத்து துண்டித்துக் கொண்டுள்ளார்.

கழிவறைகள் அவரின் அலறல் சத்தம் கேட்டு உடோடி வந்த போலீசார், அவரை அங்கிருந்து மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்கு அழைத்துச் சென்றனர். அங்கு அவர் உடல்நிலை சீராக உள்ளதாகவும் அவர் உயிருக்கு எந்த ஆபத்தும் இல்லை என்று போலீசார் தரப்பில் தகவல் தெரிவித்துள்ளனர்.

இதற்கிடையே அவர் பெண்களிடம் பாலியல் அத்துமிரலில் ஈடுபட்டது குறித்து போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு அவர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க உள்ளதாக தெரியவந்துள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Rajasthan Jaipur Police Station Case


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->