கேரளாவை அடுத்து ராஜஸ்தான் பெட்ரோல் டீசல் மீதான வரியை குறைத்தது.! - Seithipunal
Seithipunal


நாடு முழுவதும் பெட்ரோல் மற்றும் டீசல் வரலாறு காணாத விலையேற்றத்தை எட்டிய நிலையில் நேற்று மத்திய அரசு பெட்ரோல் மற்றும் டீசல் மீதான கலால் வரியை குறைத்தது.

இதனால் சென்னையில் பெட்ரோல் விலை 8.22 ரூபாய் குறைந்து 102. 63 ரூபாய்க்கும் டீசல் 6.7 ரூபாய் குறைந்து 94.24 ரூபாய்க்கும் விற்கப்படுகிறது. இந்த விலை இன்று காலை முதல் அமலுக்கு வந்தது.

இந்நிலையில் பொது மக்களுக்கு நிவாரணம் அளிக்கும் வகையில் மாநில அரசுகளும் பெட்ரோலியம் பொருட்களின் மீதான வாட் வரியை குறைக்க வேண்டும் என்று மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் கேட்டுக்கொண்டார்.

இதற்கிணங்க இந்தியாவில் முதல் மாநிலமாக கேரளா அரசு பெட்ரோல் மீதான வாட் வரியில் 2.41 ரூபாய் மற்றும் டீசல் மீதான வாட் வரியில் 1.36 ரூபாய் குறைத்தது.

இதனைத் தொடர்ந்து ராஜஸ்தான் மாநிலம் பெட்ரோல் மீதான வரியில் 2.48 ரூபாய் மற்றும் டீசல் மீதான வரியில் 1.16 ரூபாயாகவும் குறைந்துள்ளது. 

இதனால் பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூபாய் 10.40 மற்றும் டீசல் விலையில் லிட்டருக்கு ரூபாய் 7.16 குறைந்துள்ளது என ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட் டுவிட்டரில் தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Rajasthan reduces vat tax on petroleum products


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->