9 வயது பட்டியலின சிறுவன் உயிரிழந்த விவகாரம்.. காங்கிரஸ் எம்எல்ஏ ராஜினாமா.! - Seithipunal
Seithipunal


ராஜஸ்தான் மாநிலம் ஜாலூர் மாவட்டம் சுரனா கிராமத்தை சேர்ந்த 9 வயது சிறுவன் இந்திர மேக்வல். பட்டியலின சமூகத்தை சேர்ந்த இந்திர மேக்வல் அந்த கிராமத்தில் உள்ள பள்ளியில் படித்து வருகிறான். 

இந்த நிலையில், இந்திர மேக்வல் கடந்த மாதம் 20-ம் தேதி வகுப்பறையில் இருந்த குடிநீர் பானையை தொட்டு அதில் இருந்து தண்ணீர் குடிக்க எடுத்துள்ளார். இதை பார்த்த வகுப்பு ஆசிரியர் ஷாயில் சிங் (வயது 40) மாணவன் இந்திர மேக்வலை கடுமையாக தாக்கியுள்ளார்.

 பட்டியலின சமூகத்தை சேர்ந்தவர் என்பதால் குடிநீர் பானையை தொட்ட மாணவன் மீது ஆசிரியர் சரமாரியாக தாக்கியுள்ளார். ஆசிரியர் தாக்குதலில் முகம், காது, கண் பகுதியில் பலத்த காயமடைந்த மாணவன் மேக்வல் மயக்கமடைந்த நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

மாவட்ட மருத்துவமனையில் இருந்து மேல்சிகிச்சைக்காக உதய்ப்பூர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு மாணவன் மேக்வலுக்கு கடந்த சில நாட்களாக தொடர்ந்து சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில், மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வந்த மாணவன் இந்திர மேக்வல் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தான். 

இந்த நிலையில் சிறுவன் உயிரிழந்த ராஜஸ்தான் மாநில அட்ரு சட்டசபை தொகுதி எம்.எல்.ஏ.வாக உள்ள காங்கிரஸ் கட்சியை சேர்ந்த பனாசந்த் மேக்வால் ராஜினாமா செய்துள்ளார். அவர் கூறியிருப்பதாவது, "சிறுவன பலியான செய்தி கேட்டு மிகுந்த காயமடைந்தேன். ஜலோரில் 9 வயது தலித் மாணவன் மரணம் என்னை மிகவும் பாதித்துள்ளது. நான் எனது ராஜினாமாவை சமர்ப்பிக்கிறேன். தலித்துகள் மற்றும் தாழ்த்தப்பட்ட சமூகங்கள் தொடர்ந்து அட்டூழியங்கள் மற்றும் சித்திரவதைகளுக்கு உள்ளாகி வருகின்றன" என்று வேதனையுடன் தெரிவித்தார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Rajasthan SC caste student death Congress MLA resign


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->