ராமர் கோவில் திறப்பு - பாபர் மசூதி வழக்கில் தீர்ப்பளித்த உச்சநீதிமன்ற நீதிபதிகளுக்கு அழைப்பு!
Ram Temple Ayodhya kumbabishekam invite sc judges
அயோத்தியில் ராமர் கோவில் திறப்பு விழாவில் கலந்துகொள்ள, பாபர் மசூதி வழக்கில் தீர்ப்பளித்த உச்சநீதிமன்ற நீதிபதிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
வரும் 22-ந்தேதி உத்தரபிரதேச மாநிலம், அயோத்தியில் உள்ள ராமர் கோவிலை பிரதமர் நரேந்திர மோடி திறந்து வைக்கிறார்.
இந்த விழாவில் பங்கேற்க வருமாறு நாடு முழுவதும் உள்ள தலைவர்களுக்கும், முக்கிய பிரமுகர்களுக்கு, விளையாட்டு மற்றும் திரைப் பிரபலங்கள் உள்ளிட்டோருக்கும் அழைப்பு விடுக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில், ராமர் கோவில் திறப்பு விழாவில் கலந்துகொள்ள, அயோத்தி ராமஜென்ம பூமி - பாபர் மசூதி வழக்கில் தீர்ப்பளித்த உச்சநீதிமன்ற தலைமை அமர்வு நீதிபதிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
உச்சநீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதிகள் ரஞ்சன் கோகாய், போப்டே, தற்போதைய தலைமை நீதிபதி சந்திரசூட், முன்னாள் உச்சநீதிமன்ற நீதிபதிகள் அசோக் பூஷன், அப்துல் நசீர் ஆகியோருக்கு நேரில் அழைப்பிதழ் கொடுக்கப்பட்டுள்ளது.
English Summary
Ram Temple Ayodhya kumbabishekam invite sc judges