நீதிபதி முன் கண்ணீர் மல்கிய ரன்யா ராவ்; அதிகாரிகள் மிரட்டுவதாகவும், ஆவணங்களில் கையெழுத்து போடுமாறு வற்புறுத்துவதாகவும் புகார்..! - Seithipunal
Seithipunal


டுபாயில் இருந்து தங்க கட்டிகள் கடத்தி வந்தாக கன்னட திரையுலக நடிகையான ரன்யா ராவ், கடந்த கடந்த 3-ந் தேதி கைது செய்யப்பட்டார். டெல்லி வருவாய் நுண்ணறிவு பிரிவு அதிகாரிகளால் விசாரணைக்கு பின்பு சிறையில் அடைக்கப்பட்டார்.

இவர், கர்நாடக போலீஸ் வீட்டுவசதித்துறை டி.ஜி.பி.யான ராமசந்திரா ராவின் வளர்ப்பு மகள் ஆவார். இதற்கிடையில், ரன்யா ராவின் காவல் நிறைவு பெற்றதையடுத்து, இன்று மாலையில் அவரை போலீசார் கோர்ட்டில் ஆஜர்படுத்தினார்கள். 

அப்போது ரன்யா ராவ் நீதிபதியை பார்த்ததும் திடீரென்று கண்ணீர் விட்டு அழுத தொடங்கியுள்ளார். உடனே விசாரணையின் போது அதிகாரிகள் தொல்லை கொடுத்தார்களா? என நீதிபதி கேட்க, அதற்கு அழுதபடியே ரன்யா ராவ், ''விசாரணையில் அவர்கள் என்னை அடிக்கவில்லை. ஆனால், 'நீங்கள் பேசவில்லை என்றால் என்ன நடக்கும் என உங்களுக்கு தெரியும்' என சொல்லி மிரட்டுகிறார்கள்.

மிகவும் மோசமான வார்த்தைகளை பயன்படுத்தி என்னை திட்டி தீர்க்கின்றனர். இது கடும் மன உளைச்சலை தருகிறது. சில ஆவணங்களில் கையெழுத்து போடுமாறு வற்புறுத்தினார்கள். நான் மறுத்துவிட்டேன். மற்றபடி விசாரணைக்கு நான் முழு ஒத்துழைப்பு வழங்கி வருகிறேன்" என்று பேசியுள்ளார்.

இந்நிலையில், ரன்யா ராவை மீண்டும் காவலில் எடுத்து விசாரிக்க அதகாரிகள் முன்வரவில்லை. இதையடுத்து, வருகிற 24-ந் தேதி வரை ரன்யா ராவை நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்க நீதிபதி உத்தரவிட்டுள்ளார். பரப்பன அக்ரஹாரா சிறையில் மீண்டும் ரன்யா ராவ் அடைக்கப்பட்ட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Ranya Rao complained to the judge that the authorities are threatening her and forcing her to sign documents


கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!



Advertisement

கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!




Seithipunal
--> -->