கேட்பாரற்று கிடக்கும் ரூ.78,213 கோடி - மக்களே நல்ல செய்தி! ரிசர்வ் வங்கி எடுத்த முடிவு! - Seithipunal
Seithipunal


கடந்த நிதியாண்டின் முடிவில் கணக்குதாரர் கல்வி மற்றும் விழிப்புணர்வு நிதியில் (டி.ஈ.ஏ.) ரூ.62.225 கோடி இருந்தது. தற்போது இது 26 சதவீதம் உயர்ந்து ரூ.78,213 கோடியாக அதிகரித்து உள்ளதாக ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.

வங்கிகளில் 10 ஆண்டுகளுக்கு மேலாக யாராலும் உரிமை கோரப்படாத பணத்தை கூட்டுறவு வங்கிகள் உட்பட நாட்டில் உள்ள பிற வங்கிகளின் ரிசர்வ் வங்கியில் டி.ஈ.ஏ. கணக்குக்கு மாற்றி வருவது வழக்கம்.

இப்படி பல ஆண்டுகளாக வங்கிகளில் செயல்படாமல் உள்ள வாடிக்கையாளர்களின் கணக்குகளை உரிமை கோரப்படாத பணம் உடைய கணக்குகள் என வகைப்படுத்த வகைப்படுத்துவதற்கு என்று, வழிகாட்டு நெறிமுறைகளை இந்த இந்த ஆண்டின் தொடக்கத்தில் ரிசர்வ் வங்கி வெளியிட்டு இருந்தது.

இது போன்ற கணக்குகளில் ஏதேனும் முறைகேடுகள் நடைபெறாமல் தடுக்க, குறிப்பிட்ட இடைவெளியில் மறு ஆய்வு செய்ய வேண்டும் என்றும் நாடு முழுவதும் உள்ள வங்கிகளுக்கு ரிசர்வ் வங்கி அறிவுறுத்தி இருந்தது.

மேலும், உரிமை கோரப்படாமல் உள்ள பணத்தை ஒருவேளை வாடிக்கையாளர்கள் சேமித்து வைத்துள்ளார்களா என்பதை கண்டுபிடிக்க வேண்டும். அப்படி இல்லை என்றால் அவர்களின் வாரிசுகள் அல்லது அந்த வாடிக்கையாளரால் முன்மொழிக்கப்பட்ட பிற உறவினர்கள் யாரேனும் இருப்பின் அவர்களிடம் அந்த பணத்தை ஒப்படைக்க வேண்டும். அல்லது அந்த கணக்கை மீண்டும் செயல்பாட்டுக்கு கொண்டு வரும் முயற்சியில் வங்கிகள் ஈடுபட வேண்டும் என்றும் அறிவுறுத்தி இருந்தது.

இதன் மூலம் உரிமை கோரப்படாமல் உள்ள பணத்தின் அளவு குறைந்து, சரியான உரிய பயனாளர்களிடம் இந்த பணம் ஒப்படைக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இது கடந்த ஏப்ரல் மாதம் ஒன்றாம் தேதி அமலுக்கு வந்தது குறிப்பிடத்தக்கது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

RBI DEAF Amont 2024


கருத்துக் கணிப்பு

சென்னையில் ஃபார்முலா கார் ரேஸ் தேவைதானா?



Advertisement

கருத்துக் கணிப்பு

சென்னையில் ஃபார்முலா கார் ரேஸ் தேவைதானா?




Seithipunal
--> -->