பிரதமர் மோடியின் பட்டப்படிப்பு சான்றிதழை நீதிமன்றத்தில் காட்ட தயார்; டில்லி பல்கலைகழகம்..! - Seithipunal
Seithipunal


பிரதமர் நரேந்திர மோடியின் பட்டப் படிப்பு தொடர்பாக நீரஜ் என்பவர் மப்பு தாக்கல் செய்திருந்தார். இந்த வழக்கை விசாரித்த சி.ஐ.சி., எனப்படும் மத்திய தகவல் கமிஷன், 2016-இல் பிறப்பித்த உத்தரவில், '1978-இல் மோடி பட்டப் படிப்பு முடித்த அனைவரது தகவல்களையும் அளிக்க வேண்டும்' என, உத்தரவிட்டிருந்தது.

அதன் அடிப்படையில், 'பிரதமர் நரேந்திர மோடியின் பட்டச் சான்றிதழ் தொடர்பான ஆவணங்களை நீதிமன்றத்தில் காட்டுவதற்கு தயாராக உள்ளோம். ஆனால், மற்றவர்களுக்கு காண்பிக்க முடியாது' என, டில்லி உயர் நீதிமன்றத்தில் டில்லி பல்கலைகழகம் தெரிவித்துள்ளது.

நீரஜ் என்பவரின் மனு தாக்கலை எதிர்த்து டில்லி உயர் நீதிமன்றத்தில் டில்லி பல்கலைகழகம் வழக்கு தொடர்ந்தது. அதில், 'தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ், மற்றத் தகவல்களை தருவதற்கு தயாராக உள்ளோம். ஆனால், பாதுகாப்பு கருதி பிரதமர் குறித்த தகவல்களை அளிக்க முடியாது' என, டில்லி பல்கலை கூறியுள்ளது.

குறித்த வழக்கை விசாரித்த, டில்லி உயர் நீதிமன்றம், தலைமை தகவல் ஆணையத்தின் உத்தரவுக்கு, 2017-இல் தடை விதித்தது. இது தொடர்பாக தொடரப்பட்ட மற்ற வழக்குகளிலும் தீர்ப்புகளை ஒத்தி வைத்தது.

இந்நிலையில், குறித்த வழக்கு விசாரணை டில்லி உயர் நீதிமன்றத்தில் நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, டில்லி பல்கலை சார்பில் ஆஜரான சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா தன் வாதித்தார். இதன் போது, டில்லி பல்கலைகழகத்தில்,1978-இல் பிரதமர் பி.ஏ., பட்டம் பெற்றார்.

இது தொடர்பான ஆவணங்களை நீதிமன்றத்தில் காட்டுவதற்கு தயாராக உள்ளோம் என்று குறிப்பிட்டுள்ளதோடு, அதே நேரத்தில் பாதுகாப்பு கருதியும், பிரதமரின் தனிநபர் சுதந்திரம் கருதியும், இந்தத் தகவல்களை மற்றவர்களுக்கு தர முடியாது, என, குறிப்பிட்டார். இதைத் தொடர்ந்து, குறித்த வழக்கின் தீர்ப்பை உயர் நீதிமன்றம் ஒத்தி வைத்துள்ளதுள்ளமை குறிப்பிடத்தக்கது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Ready to show Prime Minister Modi degree certificate in the court Delhi University


கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!



Advertisement

கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!




Seithipunal
--> -->