பஞ்சாப் : எல்லைக்குள் நுழைந்த 3 ட்ரோன்கள்... 10 கிலோ ஹெராயின் மீட்பு..!
Recovers 10 Kg Of Heroin From 3 Drones In Punjab
பஞ்சாப் மாநிலத்தில் இந்திய எல்லைக்குள் ஊடுருவிய பாகிஸ்தான் ஆளில்லா விமானத்தை சுட்டு வீழ்த்திய எல்லை பாதுகாப்பு படையினர் 10 கிலோ ஹெராயினை கைப்பற்றினர்.
பஞ்சாப் மாநிலம் அமிர்தசரஸின் ரஜதல் கிராமத்தில், திங்கட்கிழமை இரவு 8:30 மணியளவில் இந்திய எல்லைக்குள் ஊடுருவிய பாகிஸ்தானின் ஆளில்லா விமானத்தை கண்டறிந்த எல்லை பாதுகாப்பு படையினர் சுட்டு வீழ்த்தினர். இதைத்தொடர்ந்து, நேற்று அப்பகுதியில் தேடுதல் வேட்டையின்போது, கருப்பு நிற ஆளில்லா விமானத்துடன் இணைக்கப்பட்ட ஒரு பைக்குள் 2.6 கிலோ எடையுள்ள ஹெராயின் கைப்பற்றப்பட்டது.
இதேபோல், அமிர்தசரஸின் பச்சிவிந்த் கிராமத்தில், பாகிஸ்தான் பகுதியிலிருந்து நுழைந்த மற்றொரு ஆளில்லா விமானத்தை எல்லை பாதுகாப்பு படையினர் சுட்டு வீழ்த்தினார். இதைத்தொடர்ந்து சோதனையின் போது மூன்று பொட்டலங்களுக்குள் மறைத்து வைக்கப்பட்டிருந்த 3 கிலோ ஹெரோயின் கைப்பற்றப்பட்டது. மேலும் இது தொடர்பாக இரண்டு பேர் கைது செய்யப்பட்டதாகவும் எல்லை பாதுகாப்பு படை செய்தித் தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.
இதைத்தொடர்ந்து, ஹர்டோ ரத்தன் கிராமத்தில், எல்லை பாதுகாப்பு படையினர் மற்றொரு பாகிஸ்தானின் ஆளில்லா விமானத்தை நோக்கி துப்பாக்கிச் சூடு நடத்தினர். இந்நிலையில் போதைப்பொருளுடன் இந்திய எல்லைக்குள் ஊடுருவ முயன்ற மூன்று 3 டிரோன்களையும் எல்லை பாதுகாப்பு வீரர்கள் அவை சுட்டு வீழ்த்தினர். மேலும் இந்த தொடர் சம்பவங்களில் சுமார் 10 கிலோ ஹெரோயின், கைத்துப்பாக்கி, மகசீன் மற்றும் 8 துப்பாக்கி குண்டுகள் கைப்பற்றப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
English Summary
Recovers 10 Kg Of Heroin From 3 Drones In Punjab