அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு இடைக்கால ஜாமீன் வழங்க மறுப்பு!!
Refusal to grant interim bail to Arvind Kejriwal
மதுபான ஊழல் வழக்கில் இடைக்கால ஜாமின் முடிந்து மீண்டும் சிறைக்குச் சென்ற அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு இடைக்கால ஜாமின் வழங்க டெல்லி நீதிமன்றம் மறுப்பு.
மதுபான கொள்கை முறைகேடு வழக்கில் டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் கடந்த மார்ச் மாதம் முதல் கைது செய்யப்பட்டு திகார் சிறையில் இருந்து வந்தார். பின்னர், இடைக்கால ஜாமின் கோரி அரவிந்த் கெஜ்ரிவால் தரப்பு நீதிமன்றத்தை நாடியது. நாடாளுமன்ற தேர்தல் பிரச்சாரம் செய்ய அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு சுப்ரீம் கோர்ட் இடைக்கால ஜாமீன் வழங்கியது.
மக்களவை தேர்தலில் பிரச்சாரத்தில் ஈடுபட்ட அரவிந்த் கெஜ்ரிவால் இடைக்கால ஜாமின் முடிந்து கடந்த ஜூன் இரண்டாம் தேதி ஜிகாஜ் சிறையில் சரணடைந்தார். இந்த நிலையில் மருத்துவ பரிசோதனைக்கு செல்ல இருப்பதால் ஏழு நாட்களுக்கு ஜாமீன் கோரி டெல்லி உயர் நீதிமன்றத்தில் கெஜ்ரிவால் மனு தாக்கல் செய்தார். இயந்திர நிலையில் ஜாமின் மனு இன்றுவி விசாரணைக்கு வந்தது அப்போது அவருக்கு ஜாமீன் வழங்க மறுப்பு தெரிவித்த நீதிபதி மனுவை தள்ளுபடி செய்தார்.
English Summary
Refusal to grant interim bail to Arvind Kejriwal